‘சென்னை 600028’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து, ‘அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘அதே நேரம் அதே இடம்’, ‘கற்றது களவு’, ‘வெண்ணிலா வீடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவருக்கு, நிலன் என்கிற ஒரு மகன் உள்ளார். தமிழ் பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு அந்த சீசனில், மூன்றாம் இடத்தை தட்டி சென்றார். அதன் பின் பிரபல சீரியல் தொலைகாட்சியில் "நாயகி" என்ற சீரியலில் நடித்தார்.
ஆனால், இடையில் எதோ பிரச்சனை காரணமாக அதிலிருந்து விலகி விட்டார். இப்போது, "டும் டும் டும்" என்ற வேறொரு சீரியலில் முழுவீச்சில் நடித்து கொண்டிருக்கிறார்.
லாக்டவுன் காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் நடிகைகள் வீட்டில் இருந்த படியே உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில், தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் விஜயலக்ஷ்மி.
இதனை பார்த்த ரசிகர்கள், என்ன ஸ்ட்ரக்சரு.. எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை என்று உருகி வருகிறார்கள்.
Tags
Vijaylakshmi Actress