சின்னத்திரையில் சிறந்த தொகுப்பாளினியாக அனைவரையும் சிரிக்க வைத்து கொண்டிருக்கும் டிடியின் வாழ்க்கையில் பல சோகங்கள் இருந்தாலும், அதனை வெளிக்காட்டாமல் தொடர்ந்து, தன்னுடைய தொகுப்பாளினி பணியையும், நடிகையாகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இவர், கடந்த 2014 ஆம் ஆண்டு, தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக இவர்களுடைய திருமணம் நடந்தது.
இதில் பல முன்னணி நட்சத்திரங்கள், சின்னத்திரை நடிகர்கள் அவர்களுடைய குடும்பத்தினர் என அனைவரும் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர். ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை, 3 ஆண்டுகள் கூட நிலைக்கவில்லை.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். இதை தொடர்ந்து, சமீபத்தில் முதல் முறையாக விவாகரத்து பற்றி பேசிய டிடியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த், டிடிக்கு அதிக ஆண் நண்பர்கள் சகவாசம் இருந்ததாகவும், அவர் இரவு பார்ட்டிகளில் அதிகம் கலந்து கொண்டதால் தான் தங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டு, அது விவாகரத்து வரை சென்றதாக தெரிவித்தார்.
இதையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு மீண்டும் சின்னத்திரை, சினிமா என கலக்கிகொண்டிருக்கிறார் திவ்யதர்ஷினி. இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், தனது ஒரு காலில் முட்டி வரை கட்டு போட்டுக்கொண்டிருக்கிறார்.லாக்டவுன் செய்யப்பட்ட சில நாட்களில் இது நடந்தது எனவும்,அந்த நேரத்தில் இதனை சொல்லி உங்களுடைய வேதனையை இரண்டு மடங்காக ஆக்க வேண்டாமே என்று இத்தனை நாள் சொல்ல வில்லை எனவும்உங்களுடைய பிராத்தனைகள் என்னை விரைவில் குணமடைய வைக்கும் எனவும் கூறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதலும், விரைவில் குணம் பெற வேண்டும் என்று வாழ்த்துக்களும் கூறி வருகிறார்கள்.