விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் மாணவியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை வர்ஷா பொல்லம்மா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான
திரைப்படத்தில் நடித்திருந்தார் .
தற்போது ஊரடங்கு உத்தரவால் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். திரையுலக
பிரபலங்கள் வித்தியாச வித்தியாசமான ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவிட்டு
வருகின்றனர்.
இந்நிலையில்,இவர் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் உங்கள் Skin-ஐ எப்படி பளபளப்பாக உள்ளது என கேட்டார்.
அதற்கு பதிலளித்த அவர், நான் நிறைய தண்ணீர் குடிப்பேன். நொறுக்கு தீனிகளை, எண்ணெய் அதிகம் உள்ள தின்பண்டங்களை அதிகம் சாப்பிட மாட்டேன். முடிந்த அளவுக்கு நிறைய தண்ணீர் குடிப்பேன் என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து மறு கேள்வி எழுப்பிய ஒரு ரசிகர், எல்லோரும் தண்ணீர் குடித்தால் Skin-ற்க்கு நல்லது என கூறுகிறார்கள். ஆனால், நான் அதிகம் தண்ணீர் குடித்தால் எனக்கு சிறுநீர் தான் அதிகம் வருகிறது என கூறினார்.
இந்த கேள்வியை பார்த்து குபீர் என சிரித்த வர்ஷா பொல்லம்மா.. "உண்மை தான். நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுக்கு நல்லது. அடிக்கடி கழிவறை செல்லவேண்டுமே என்று தண்ணீர் குடிக்காமல் இருக்காதீர்கள். முடிந்த வரை அதிக அளவு தண்ணீர் குடியுங்கள்" என்று பதிலலளிதுள்ளார்.



