தமிழ் சினிமாவை பொறுத்தவரை முன்னணி நடிகர்களின் படங்கள் ஹிட் அடித்தாலும் சரி, ப்ளாப் ஆனாலும் சரி அந்த படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.
ஆனால், அவ்வப்போது வெளியாகும் சிறந்த கதை மற்றும் கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் ரீச் ஆவதே கிடையாது. இப்படி ரீச் ஆகாமலேயே இருக்கும் படங்கள் கொண்டாடப்படுவதும் இல்லை. படத்தை இயக்கிய இயக்குனருக்கும் எந்த வித பெரிய அறிமுகமும் கிடைப்பது இல்லை.
வீட்டின், ஷோ கேசில் வைக்க இரண்டு அல்லது மூன்று விருதுகள் மட்டுமே அவர்களுக்கு கிடைக்கின்றது. ஆனாலும், நல்ல நல்ல கதையம்சங்கள் கொண்டபடங்கள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டே தான் இருக்கின்றன.
அந்த வகையில், சிறப்பான கதை மற்றும் கதை களம் கொண்ட படங்களின் பட்டியலை இங்கே கொடுத்துள்ளோம். ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் இவற்றை நீங்கள் பார்த்து ரசிக்கலாம் என்ற நோக்கில் இந்த பட்டியல் இப்போது வெளியிடப்படுகிறது. இது தவிர வேறு படங்கள் இருந்தாலும் கமெண்ட் செய்யுங்கள்.
படத்தின் பெயர் மற்றும் IMDb ரேட்டிங் :
- மேற்கு தொடர்ச்சி மலை - 8.8/10
- அன்பே சிவம் - 8.7/10
- ஆரண்ய காண்டம் - 8.6/10
- இருவர் - 8.5/10
- கன்னத்தில் முத்தமிட்டாள் - 8.4/10
- ஜோக்கர் - 8.4/10
- ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - 8.2/10
- உறியடி - 8.1/10
- இறைவி - 8.0/10
- ஆயிரத்தில் ஒருவன் - 7.7/10
- மூடர் கூடம் - 7.7/10
- மயக்கம் என்ன - 7.6/10
- காவியத்தலைவன் - 7.6/10
- தடையறத் தாக்க - 7.2/10
- உத்தம வில்லன் - 7.2/10
Tags
Tamil movies