தனது 27 வயது காதலியுடன் தற்கொலை செய்து கொண்ட 30 வயது இளம் நடிகர்..! - ரசிகர்கள் அதிர்ச்சி..!


உலகப்புகழ் பெற்ற படம் "அபோகலிப்டா". இந்தப் படத்தில் நரபலி கொடுப்பதற்காக மந்திரவாதி ஒருவனின் தளபதி கிராமத்தில் உள்ள ஆண்களை அடிமைகளாக பிடித்துச் செல்வான். 

அப்படி பிடித்துச் செல்லும் கிராமத்து இளைஞர்களில் ஒருவனாகவும், ஹீரோவின் நண்பனாகவும் நடித்தவர் கிரிகாரி டைரி பாய்ஸ் (Gregory Tyree Boyce). இதுதவிர நிறைய படங்களின் பல பாகங்களிலும் நடித்துள்ளார். 

இவர் தனது காதலி நடாலியாவுடன் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்தார். அடிக்கடி தன் தயாருக்கு போன் பேசும் வழக்கம் உள்ள கிரிகரி கடந்த சில நாட்களாக போன் செய்யாததால் சந்தேகம் அடைந்த அவரது தாயார் வீட்டுக்கு சென்று பார்த்தபோது கிரிகிரியும், அவரது காதலி நடாலியாவும் ஒரே அறையில் பிணமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் பிணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். 30 வயதான கிரிகிரியும், 27 வயதான நடாலியாவும் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது அவர்கள் மரணத்திற்கு வேறு காரணம் இருக்கிறதா? என்ற போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

"அன்னையர் தினத்தில் வாழ்த்து பெற்றுச் சென்ற மகனை இழந்து தவிக்கிறேனே" என்று கண்ணீர் மல்க கதறிக்கொண்டிருக்கிறார் கிரிகிரியின் தாய். இவர்கள் மரணம் ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

View this post on Instagram

A post shared by Ggr8T (@mr_alwaysgrindn) on
Previous Post Next Post
--Advertisement--