90ஸ் கிட்ஸ்களின் மாலைப்பொழுதை மறக்க முடியாததாக மாற்றிய "மைடியர் பூதம்" சீரியல் சிறுவர்களின் தற்போதைய புகைப்படம்..!


90ஸ் கிட்ஸ்கள் சில விஷயங்களை பார்த்தால் இப்போதும் குழந்தை போல துள்ளுவார்கள். இந்த உலகில் சில விஷயங்கள் அப்படியே நம்மை சிருவயதிற்கு கொண்டு செல்லும். அதில் முதலவதாக இருப்பது, சிறுவயதில் நாம் பார்த்த படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் தான். அந்தவகையில், பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான மை டியர் பூதம் சீரியலும் ஒன்று. 
 
ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் ஸ்கூல் பேக்கை ஒரு மூலையில் வீசி விட்டு வீட்டில் இருந்த நொறுக்கு தீணிகளை எடுத்துக்கொண்டு தொலைக்காட்சி முன்பு ஆஜாரான காலம்.

மை டியர் பூதம் கதையின் ஹீரோவாக மூஸா என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிறுவனின் பெயர் அபிலாஷ். மக்களுக்கு எதாவது பிரச்னை என்றால் `மூசா... வா..` என்று சொன்னால் உடனே வந்து உதவி பண்ணும் மூசா இப்போது எஞ்சினியரிங் முடித்துவிட்டு சினிமா துறையில் பயணித்து கொண்டிருக்கிறார். 

"465" என்ற படத்திற்கு எக்சிக்யூடிவ் ப்ரொட்யூசராக பணியாற்றி இருக்கிறார். `தோனி கபடி குழு` என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இப்போது, ஆரி நடிக்கும் `நாகேஷ் திரையரங்கம்` படத்தில் ப்ரொடக்‌ஷன் கன்ட்ரோலராகவும் கூடவே படத்தில் முக்கியமான ரோலிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். 

மை டியர் பூதம் சீரியலில் இவருடன் நடித்த மற்ற குழந்தைகளான பரத்பாலு, கௌதம்,நிவேதா தாமஸ், ஹரிதா ஆகியோர் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம் வாங்க..

01:மூசா ( அபிலாஷ் )

02:பரத் (பாலு)

03:கௌரி (நிவேதா தாமஸ்)

04:கௌதம் (கௌதம்)

05:ஹரிதா (சந்தியா)

போனஸ் : டைட்டில் பாடல்

90ஸ் கிட்ஸ்களின் மாலைப்பொழுதை மறக்க முடியாததாக மாற்றிய "மைடியர் பூதம்" சீரியல் சிறுவர்களின் தற்போதைய புகைப்படம்..! 90ஸ் கிட்ஸ்களின் மாலைப்பொழுதை மறக்க முடியாததாக மாற்றிய "மைடியர் பூதம்" சீரியல் சிறுவர்களின் தற்போதைய புகைப்படம்..! Reviewed by Tamizhakam on May 04, 2020 Rating: 5
Powered by Blogger.