தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்த தமன்னா கேடி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தமன்னா நடித்த கல்லூரி திரைப்படம் அவருக்கும் பெரும் பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த தமன்னா.
தமிழில் அஜித், விஜய் உட்பட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டுவிட்டார். அதேபோல் பவன் கல்யாண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர் எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்.
பாகுபலி படத்தில் தமன்னா நடித்த அவந்திகா கேரக்டர் அவரது கேரியரையே மாற்றும் படமாக அமைந்தது. ஹோம்லி, கிளாமர் என இரண்டையும் கலந்து கட்டி என்ன தான் நவரசத்தையும் வெளிப்படுத்தினாலும் தமன்னாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் அமையவில்லை.
அதனால் தனது சோசியல் மீடியா பக்கங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். துளி கூட டிரஸ் இல்லாமல் தனது பளபளக்கும் மேனியில் தலையணையை மட்டும் கட்டிக்கொண்டு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.
தற்போது 30 வயதானாலும் தமன்னாவை பார்ப்பதற்கு அவரது அழகோ, இளமையோ சற்றும் குறைந்த மாதிரி தெரியவில்லை. சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தன்னை சுற்றி எதுவும் சர்ச்சை வந்து விடாத படி பார்த்துக்கொள்வார்.
ஆனால், சமீப காலமாக அம்மணியை பற்றிய கிசுகிசுக்கள் சிறகடித்து பறக்கின்றன. அந்த வகையில், பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்குடன் இவர் டேட்டிங் செல்வதாக சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.
இது குறித்து பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள தமன்னா, அப்துல் ரசாக் கிரிக்கெட் வீரார் மட்டுமல்ல நடிகரும் கூட, அவர் நடிகர் மட்டுமல்ல டாக்டரும் கூட. இன்று கிரிக்கெட் வீரர், நாளை நடிகர், அடுத்த நாள் மருத்துவர். இது போன்ற அடிப்படை இல்லாத வதந்திகளுக்கு எப்போதுமே நான் பதில் அளிப்பதில்லை என்று கூறியுள்ளார்.இதன் மூலம்,விளம்பர படத்தில் மட்டுமே அவருடன் இணைந்து நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.