இது மட்டும் தான் என்னுது - மத்ததெல்லாம் இல்லை - சுப்ரமணியபுரம் நடிகை ஸ்வாதி
சுப்ரமணியபுரம், கனிமொழி, போராளி போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஸ்வாதி ரெட்டி. இவர், கடந்த 2018-ம் ஆண்டு விகாஸ் வாசு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியிருக்கிறார். இந்நிலையில் திடீரென்று தனது திருமண படத்தையும், கணவரின் படத்தையும் தனது இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கினார்.
இதையடுத்து கணவருக்கும் ஸ்வாதிக்கும் முட்டல் மோதல் எனவும் விவாகரத்து செய்ய உள்ளதாகத் தகவல் பரவியது. இது பற்றி சுவாதிக்குத் தெரிய வந்தது உடனே அவர் வீடியோ ஒன்றை வெளியீட்டு விளக்கம் அளித்தார்.
அதில், 'விவகாரத்து என்பதெல்லாம் வதந்தி. எனது திருமண வாழ்க்கை தனிப்பட்ட முறையில் வைக்கவே என்னுடைய திருமண படங்களை இணையத்திலிருந்து எடுத்துள்ளேன். அதை எல்லாம் எனது பர்சனல் போல்டரில் சேமித்து வைத்திருக்கிறேன்' என்று கூறினார்.
ஏற்கனவே இணையம் முழுக்க பப்ளிக் ஆகி கிடக்கும் புகைப்படங்களை நீக்கி விட்டு பர்ஷனல் என்று கூறுகிறாரே இவருக்கு என்ன ஆச்சு என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில்,தன்னுடையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிலதகவல்களை வெளியிட்டுள்ளார்.
நான் இன்ஸ்டாகிராமில் மட்டும் தான் இருக்கிறேன்.இது மட்டும் தான் என்னுடையது. டிவிட்டரில் இருப்பது எல்லாம் போலியானவை என்று கூறியுள்ளார்.
இது மட்டும் தான் என்னுது - மத்ததெல்லாம் இல்லை - சுப்ரமணியபுரம் நடிகை ஸ்வாதி
Reviewed by Tamizhakam
on
May 06, 2020
Rating:
