வீட்டில் முடங்கி இருக்கிறோமே என்று புலம்பாமல் தமக்கு கிடைத்துள்ள ஓய்வை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் நிக்கி கல்ராணி.
இதற்கான சில பயனுள்ள குறிப்புகளையும் அவர் சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். வழக்கமாக அலுவலகம் செல்லும் பரபரப்பிலும் வீட்டு வேலைகளாலும் காலையில் உடற்பயிற்சி செய்ய இயலாமல் பலர் தவிக்கிறார்கள்.
அதேபோல் மாலை அலுவலகத்தில் இருந்து திரும்பிய பிறகு சோர்வு காரணமாக உடற்பயிற்சி செய்வது குறித்து நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. “இப்போது வீட்டில் சும்மா இருக்காமல் உடற்பயிற்சிக்கு கணிசமான நேரத்தை ஒதுக்குங்கள்.
வீட்டின் மாடிப்படிகளில் ஏறி இறங்குவது நல்ல உடற்பயிற்சி. இதனால் நேரத்தைக் கடத்த முடியும் என்பதோடு உடலுக்குச் சிறந்த பயிற்சியாகவும் அமையும் என்கிறார் நிக்கி கல்ராணி.
மேலும் சில எளிய உடற்பயிற்சி முறைகளையும் அவர் அடுத்தடுத்த பதிவுகளில் விவரிக்க உள்ளாராம். ரசிகர்களும் அவற்றை அறிய ஆவலாக உள்ளனர். வெறும் கருத்து மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தால் யாருக்கு தான் பிடிக்கும். அவ்வப்போது கவர்ச்சியையும் இறக்கி விட மறப்பதில்லை அம்மணி.
அந்த வகையில், தற்போது தன்னுடைய தொப்புள் தெரியும் அளவுக்கு ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் படு சூடான கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் நிக்கி.