உடல் எடை குறைக்க படாத பாடு படும் சொப்பன சுந்தரி.! - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!


தமிழில் வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அதன்பிறகு அவர் பல தமிழ் படஙக்ளில் நடித்தார். வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலில் அவர் ஆடியது வைரலானது. 

தற்போது கொரோனா லாக்டவுனில் மற்றவர்களை போலவே மனிஷா யாதவ் தன் வீட்டிலேயே தான் இருக்கிறார். இந்நிலையில் தனது கணவருக்கு அவர் முடி வெட்டி விட்டுள்ளார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் மனிஷா யாதவ். 

நாடு முழுவதும் சலூன்கள் மூடிய நிலையிலேயே இருப்பதால் தான் இப்படி. இது பற்றி குறிப்பிட்டுள்ள மனிஷா, "இறுதியாக அவர் அந்த கேள்வியை கேட்டார்.. என் முடியை நீ வெட்டுவியா? " என்றார். நான் பதில் சொல்லவே இல்லை வெட்டியேவிட்டேன் என பதிவு செய்திருந்தார்.

Weight Loss :  


நடிகைகள் பலரும் லாக் டவுன் நேரத்தில் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்து வரும் நிலையில் அம்மணியும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் உடல் எடையை குறைக்கவும் படாத பாடு பட்டு வருகிறார்.


இதனால்,லாக் டவுனில் கணிசமான நேரத்தை ஜிம்மிலேயே செலவிடுகிறார் அம்மணி.