நடிகை, நிவேதா தாமஸ் தமிழ் திரைப்படத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இதை தொடர்ந்து, போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி, சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன் பின் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் உலகநாயகன் கமலுக்கு மகளாகவும், தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மகளாகவும் நடித்தார்.
தற்போது, தெலுங்கு 'பிங்க்' ரீமேக்கில் நடிக இருக்கிறார். தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இந்த படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையான உடற்பயிற்சி ( Strenuous Exercise)
இதற்காக, கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை கணிசமாக குறைத்து சிக்கென மாறியுள்ளார் அம்மணி. உணவகம் ஒன்றில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஜீரணிக்க முடியவில்லை (Unable to digest)
அவரை பார்த்த ரசிகர்கள் உங்கள் அழகே பொசு பொசுவென இருப்பது தான், இப்படி இருப்பதை பார்க்க ஜீரணிக்க முடியவில்லை என்று கூறி வருகிறார்கள்.





