விமல் நடித்த பசங்க திரைப்படம் 2009ல் வெளிவந்தது. இப்படத்தை சசிகுமார் தான் தயாரித்தார், அறிமுக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார்.படத்தில் விமலுடன் ஒரு புது முக கதாநாயகி வேகா நடித்திருந்தார்.
இவர் சரோஜா என்ற படத்தில் முதன் முதலில் நடித்தவர். இவர்கள் தவிர சில குழந்தைகள் முக்கிய வேடங்களிலும் மற்றும் துணை கதாபாத்திரங்களில் சிலரும் நடித்து உள்ளனர்.
நடிகை வேகா நடிகை மட்டும் இல்லாமல் ஒரு மாடலும் கூட, இவர் இந்தியாவில் உள்ள சட்டீஸ்கர் மாநிலத்தில் பிறந்தவர். ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரத்தில் வளர்ந்தவர்.
சிட்னி நகரத்தில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைகழகத்திலும் அதன் பின்பு பெங்களூர் நகரத்தில் உள்ள ஐ.ஐ.எம். மிலும் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு படித்து இருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். இவர் முதன் முதலில் சரோஜா படத்தில் தான் அறிமுகமானார்.
ஆனால் அந்த படத்தில் இவரின் கேரக்ட்டர் பெரிதாக பேசப்படவில்லை, பின்பு பசங்க படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகிவிட்டார், ஆம் இவரை வேகா எனற்றால் கூட ரசிகர்களுக்கு தெரியாது சோபிகண்ணு என்றால் அனைவருக்கும் தெரியும்.
இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சில படத்தில் தான் நடித்தார் பின்பு எந்த படத்திலும் நடிக்க வில்லை தற்பொழுது இவரின் புகைபடம் இணையதளத்தில் வைரலாகிறது இதை பார்த்து விட்டு இது சோபிகண்ணா என வியக்குகிறார்கள்.





