கனா காணும் காலங்கள் சீரியல் "பச்ச" என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார்ன்னு பாத்திங்கனா ஷாக் ஆகிடுவீங்க..?


பொதுவாக சீரியல் என்றால் இளசுகளுக்கு பிடிக்காது. இப்போது தான் வெப் சீரிஸ்.. அது இது என்னென்னமோ வந்துவிட்டது. ஆனால், 90ஸ் கிட்ஸ்களின் காலத்திலேயே சீரியலை விரும்பி பார்க்க வைத்த ஒரு சீரியல் தான் இந்த கனா காணும் காலங்கள்.

இந்த சீரியலில் நடித்த அநேக நடிகர்களை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. 2006-ம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் 2009-ம் ஆண்டு முடிவடைந்தது.

இந்த சீரியலில் பச்சை என்கிற பச்சையப்பன் கதாபாத்திரம் பலருக்கும் பிடித்தமான ஒரு கதாபாத்திரம். சோடா புட்டி கண்ணாடி, வெகுளியான மாணவன் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் பச்சை. இவரது உண்மையான பெயர் வாசுதேவ கிருஷ் மதுசுதன் என்பதாகும்.


இந்த சீரியலுக்கு பிறகு மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் நடனமாடினார். அதன் பிறகு ஆபிஸ் என்ற ஒரு சீரியலில் நடித்தார். அதன் பிறகு, கனா காணும் காலங்கள் இர்ஃபான் ஹீரோவாக நடித்த சுண்டாட்டம் என்ற படத்தில் வில்லனாக நடித்தார் பச்சை.


அதன் பிறகு எண் கணவன் என் தோழன் மற்றும் மெல்ல திறந்தது கதவு என்ற சீரியலில் நடித்தார். இப்போது பட வாய்ப்புகளுக்காக வழி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருகிறார் நம்ம பச்ச.கனா காணும் காலங்கள் சீரியல் "பச்ச" என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார்ன்னு பாத்திங்கனா ஷாக் ஆகிடுவீங்க..? கனா காணும் காலங்கள் சீரியல் "பச்ச" என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார்ன்னு பாத்திங்கனா ஷாக் ஆகிடுவீங்க..? Reviewed by Tamizhakam on May 04, 2020 Rating: 5
Powered by Blogger.