அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" படத்தில் பாண்டியம்மாவாக நடித்தவர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா. முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
படப்பிடிப்பு தளத்தில் துறு,துறுவென சுற்றி வந்த இந்திரஜாவின் டிக்-டாக் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம்."பிகில்" படத்திற்கு முன்பை விட, இப்போது சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருந்து வரும் இந்திரஜா போட்டோ ஷூட் ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
செம்ம மாடர்ன் லுக்கில் இந்திரஜா வெளியிட்ட புகைப்படங்கள் சமீபத்தில் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகியது.
இந்நிலையில், இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆசாமி ஒருவர் உங்கள் அப்பாவுக்கு காதலியாக நடிக்க சொன்னால் நடிப்பீர்களா..? என்று கேள்வியை கேட்டுள்ளார். இதற்கு, என் அப்பாவை காதலிப்பது போல நடிக்க சொன்னால் நான் நடிப்பேன். ஏன் என்றால் என் அப்பாவை நான் அவ்வளவு லவ் பண்றேன் ப்ரோ.. என்று கூலாக பதிலடி கொடுத்துள்ளார் இந்திரஜா.



