சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார்.
இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். தமிழில், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே எனும் படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்திருந்தார்.
இந்த படம் இளவட்டங்களை கவர்ந்தது. மேலும், இந்த படத்தில் ரித்திகா சிங் கதாபாத்திரத்தின் பட்டைப்பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது மிகவும் பிரபலமானது. சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.
கொரோனா ஊரடங்கு அனுமன் வால் போல நீண்டு கொண்டேபோகின்றது. எப்போது தான் முடிவுக்கு வரும் என்றே தெரியவில்லை. செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மக்கள் கொரோனா அச்சத்தில் இருந்து வெளியே வந்து இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்று ஜோதிடர்கள் நம்பிக்கை கொடுக்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க, ஷூட்டிங் இல்லாததால் சினிமா பிரபலங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் நேரத்தை கழித்து வருகிறார்கள். அந்த வகையில், ரித்திகாசிங்கிற்கு ரொம்பவே போர் அடிக்கின்றது போல, சில நாட்களுக்கு முன்பு வாஷிங் மெஷினில் துணியை துவக்காமல் தானே துவைத்து அந்த வீடியோவை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது தன்னுடைய பழைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தொடை தெரியும் அளவுக்கு கருப்பு உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஹாட் ஹாட் என கதறி வருகிறார்கள்.
Tags
Rithika Singh