தற்போது விஜேயும் நடிகையுமான சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் எடுத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அது எல்லாம் வைரல் ரகம்.
டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்ரா. சின்னத்திரையில் VJ வாக இருந்து நடிகையாக வலம் வருபவர் சித்ரா.
இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம்.
சீரியலில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி, பயாலஜி எல்லாம் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள்.
சித்ரா-குமரன் ஜோடி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் , அன்பையும் பெற்று வருகிறார்கள். சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் சித்ரா. அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது வரிக்குதிரை போன்ற ஒரு டீயை அணித்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வரிக்குதிரை மாதிரியே இருக்கீங்க என்று அசடு வழிந்து வருகிறார்கள்.



