இதனால் எனக்கு தனிமை பிடிக்கும் - சீரியல் நடிகை தேவிப்ரியா வெளியிட்ட வீடியோ..!


தொலைக்காட்சி சீரியல்களில் 90ஸ் காலக்கட்டத்தில் சீரியல் பார்த்தவர்கள் எல்லாவருக்கும் தேவி ப்ரியாவை நன்றாகவே தெரிந்திருக்கும். வில்லி கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கி வந்தவர் தான் தேவிப்ரியா. 

இவர் நடிக்கும் போது இவரின் கதாபாத்திரத்தை இயல்பாக நடித்து காட்டுவார். பிரபல தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான "சக்தி" தொடரின் மூலம் தான் தேவிப்ரியா ரசிகர்களுக்கு பரிட்சயமானார். 

தேவிப்ரியா சீரியலில் தன் நடிப்பை நன்கு வெளிப்படுத்தியதால், இவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்திருந்தன . இவருக்கு சிறு வயதில் இருந்தே இவர் பெண் போலிஸ் ஆக வேண்டும் என்பது தான் ஆசையாம். 

அதற்கு பலனாக இயக்குநர் பாரதிராஜா சீரியலில் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். பொதுவாக நெகட்டிவ் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த தேவி ப்ரியா. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட பல்வேறு நடன நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை நிரூபித்தார். அதன் பின்னர் ஒரு நிலை முன்னேறி, தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார்.

சீரியலிலில் கூட இந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமா..? என்பது போல தான் இருக்கும் இவரது உடைகள். புடவை அணிந்தாலும் அது கவர்ச்சியாகவே இருக்கும் படி பார்த்துக்கொள்கிறார் அம்மணி.


சமீபத்தில், பிரபல சமூக வலைத்தளமான டிக்-டாக்கில் விதவிதமான பாடல்களுக்கு அசைவுகளை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில்,தனிமை எனக்கு பிடிக்கும், காரணம் என் மனதை காயப்படுத்த அங்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்ற வசனத்திற்கு டிக் செய்து வெளியிட்டுள்ளார்.

இதனால் எனக்கு தனிமை பிடிக்கும் - சீரியல் நடிகை தேவிப்ரியா வெளியிட்ட வீடியோ..! இதனால் எனக்கு தனிமை பிடிக்கும் - சீரியல் நடிகை தேவிப்ரியா வெளியிட்ட வீடியோ..! Reviewed by Tamizhakam on May 08, 2020 Rating: 5
Powered by Blogger.