சமீப காலமாக நடிகர்கள், இயக்குனர் என தங்களை லைம் லைட்டில் வைத்துக்கொள்ள ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயங்களை பேசிவிட்டு வீட்டுக்கு சென்று ஏ.சி ரூமில் தூங்கி விடுகிறார்கள்.
ஆனால், ரசிகர்கள் மற்றும் அவரகளது கருத்துக்கு எதிர் கருத்து கொண்டவர் அவர்களை கண்டமேனிக்கு திட்டியும். அந்த பிரபலத்தின் ரசிகர்கள் கண்ணு முன்னு தெரியாமல் அவர் அப்படியென்ன தப்பாக பேசிவிட்டார் என்று வரிந்து கட்டிக்கொண்டு சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக்கொண்டிருகிறார்கள்.
அந்த வகையில், பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா பெண்களின் முன்னழகு பற்றி ஒரு கருத்தை கூறி நெட்டிசன்களிடம் சிக்கிக்கொண்டார். வழக்கம் போல இவரது இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே வருகின்றது.
நாகார்ஜுனா நடித்த ’சிவா’ என்ற படம் மூலம் 1989-ல் இயக்குனரான அறிமுகமானார் ராம் கோபால் வர்மா. தொடர்ந்து தெலுங்கு, இந்தி மொழிகளில் படம் இயக்கி பிரபலமானார். இவர் இயக்கிய 'சத்யா' படம் தமிழகத்திலும் சூப்பர் ஹிட்டாக ஓடியது.
இந்தியில் இவர் இயக்கிய ’ரங்கீலா’வுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பல்வேறு படங்களை இயக்கி தயாரித்துள்ள ராம் கோபால் வர்மா, சமீபத்தில் ’லட்சுமி என்.டி.ஆர்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் ரிலீஸ் ஆகிவிட்டது. அடுத்து அவர் இயக்கும் படத்துக்கு ’கோப்ரா’ என்ற பெயரிடப்பட்டுள்ளது.
இதில் சிபிஐ அதிகாரியாக ராம் கோபால் வர்மா நடிக்கிறார். இது அவர் நடிக்கும் முதல் படம். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்த மாஃபியா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அவரது பிறந்த நாளான நேற்று வெளியானது.
சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி ராம் கோபால் வர்மாவுடன் டேட்டிங் சென்றேன் என்று ஒரு புழுதியை கிளப்பி விட்ட போது கூட, நான் பெண்களுடன் வெளியே செல்வதில்லை. உள்ளே தான் செல்வேன் என்று இரட்டை அர்த்தம் கொண்ட பதிலை கொடுத்தார்.
இந்நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரண்டு பெண்கள் காரில் அமர்ந்து கொண்டு செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து "மனிதன் உருவாக்கிய நகை முன்னே உள்ளது. கடவுள் உருவாக்கிய நகை பின்னே உள்ளது என பின் சீட்டில் அமர்ந்துள்ள பெண்ணின் முன்னழகை குறிப்பிடும் படி ஒரு கருத்தை கூறியுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், உங்கள் பெண்ணாக இருந்தால் இப்படிகருத்து தெரிவிப்பீர்களா.? என்று விளாசி வருகிறார்கள்.
இன்னொரு ரசிகர் அந்த பெண்ணின் முன்னழகை மறைக்கும் படிபுடவையை எடிட்செய்து இப்போ ஓ.கேவா சார் என்று கிண்டல் செய்துள்ளார்.





