தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் உடன் ராம் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
வயது வித்தியாசம் இல்லாமல் மூத்த ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு வரும் த்ரிஷா, சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில். மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக “ஆச்சார்யா” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
சுமார் 5 வருடத்திற்கு பிறகு சிரஞ்சீவியுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை கோடிகளில் சம்பளம் பேசியும் திடீர் என்று உதறித்தள்ளினார். இதுகுறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்த த்ரிஷா, “சில சமயங்களில் ஆரம்ப கட்டத்தில் சொல்லப்பட்ட, ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள், திடீரென முற்றிலும் மாறிவிடுகிறது. படைப்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிரஞ்சீவி சாரின் படத்தில் இருந்து விலகுகிறேன். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். என் அன்புடைய தெலுங்கு ரசிகர்களே உங்களை மறுபடியும் எனது அடுத்த படத்தில் சந்திக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
இது தெலுங்கு சினிமா ஊடங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. சிரஞ்சீவியுடன் எதோ பிரச்சனை போல இருக்கிறது என எழுத ஆரம்பித்து விட்டனர். இனிமேலும், பொறுமையாக இருந்த நம்முடைய இமேஜ் டேமேஜ் ஆகிவிடும் என்பதால் இதுகுறித்து தொடர்ந்து மெளனம் காத்து வந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது உண்மையை போட்டுடைத்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, ஆச்சார்யா படத்தில் இருந்து த்ரிஷா விலகியதாக தகவல் கிடைத்தது. இது குறித்து, படகுழுவுடன் விசாரித்தேன். யாராவது த்ரிஷா மனம் கஷ்டப்படும் படி நடந்து கொண்டீர்களா? என்று கேட்டேன்.
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. நடிகை த்ரிஷா மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” படத்தில் நடிக்க கமிட் ஆகியிருப்பதாகவும், அந்த படத்திற்கு நிறைய நாட்கள் தேவைப்பட்டதால் எனது படத்திலிருந்து விலகியதாகவும் தகவல் கிடைத்தது” என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.