ராணாவின் காதலை ஏற்ற அவரது தோழி..! - ட்விட்டரில் ஹாட் டாக் இது தான் - யாருன்னு பாருங்க..!


அஜித்தின் ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராணா டகுபதி. அதைத்தொடர்ந்து பாகுபலி படத்தில் நடித்த ராணா டகுபதிக்கு அப்படம் பெரும் வரவேற்பையும், ரசிகர்களையும் பெற்றுத் தந்தது.

சமீபத்தில் வெளியான நடிகர் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில்  அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரத்துக்கான புகைப்படம் ஒன்றை அவர் பதிவிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கினார்.

அதை அவரது பழைய புகைப்படத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் நம்ப முடியாத அளவுக்கு தனது உடல் எடையைக் குறைத்திருப்பது தெரிய வரும். பாகுபலி படத்தில் கம்பீரமாக வலம் வந்த பல்வாள் தேவனா இது எனும் அளவுக்கு மெலிந்த உடலுடன் அவர் தோன்றியிருப்பது அவரது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. 

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் உங்களுக்கு என்ன ஆச்சு, உடம்புக்கு எதுவும் பிரச்னையா, நலமாக உள்ளீர்களா என்று நலம் விசாரித்து வருகின்றனர்.தெலுங்கு நடிகரும் பாகுபலி படத்தில் பல்வாள்தேவனாக மிரட்டியவருமான ராணா டக்குபதிக்கு ஏன் இந்த நிலை என்று கேட்டு வந்தனர். 

இந்த அதிர்ச்சியே முடிவுக்கு வராத நிலையில் அடுத்த ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ராணா. ஆம், தற்போது முதன் முறையாக தன் காதலியின் படத்தை வெளியிட்டு ரகசியத்தை உடைத்துள்ளார். 

ஏற்கனவே த்ரிஷா, அனுஷ்கா என்று கிசுகிசுக்கப்பட்ட ராணா, அமைதி காத்து வந்தார். இப்போது மிஹீகா பஜாஜ் என்ற பெண்ணைக் காதலிப்பதாகவும் அவர் சம்மதித்துவிட்டதாகவும் சமூக ஊடகத்தில் படத்துடன் வெளியிட்டுள்ளார். மிஹீகா ஹைதராபாத்தில் ஆடைவடிவமைப்பு ஸ்டூடியோ நடத்துகிறார்.

ராணாவின் காதலி ஹைதராபாதைச் சேர்ந்த இன்டீரியர் டிஸைனர் மிஹீகா பஜாஜ். சொந்தமாக ட்யூ ட்ராப் டிஸைன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஈவென்ட் மேனேஜ்மென்ட், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை இந்த நிறுவனத்தின் மூலம் செய்து வருகிறார் மிஹீகா.


இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ராணாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். ராணாவின் நண்பரான நடிகர் ஆர்யா வாழ்த்துகள் ப்ரதர் என்று கூறியுள்ளார்.

ராணாவின் காதலை ஏற்ற அவரது தோழி..! - ட்விட்டரில் ஹாட் டாக் இது தான் - யாருன்னு பாருங்க..! ராணாவின் காதலை ஏற்ற அவரது தோழி..! - ட்விட்டரில் ஹாட் டாக் இது தான் - யாருன்னு பாருங்க..! Reviewed by Tamizhakam on May 12, 2020 Rating: 5
Powered by Blogger.