தமிழில் சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, அரண்மனை 2 ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பூனம் பாஜ்வா.
இவர் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். கொளுக்மொளுக் என வசீகரிக்கும் அழகான தோற்றம் கொண்டிருந்தாலும் சொல்லும்படியாக படவாய்ப்புகள் ஏனோ அவருக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில் படவாய்ப்புக்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் வெளியிட்டு வந்தார் அம்மணி. தற்போது, கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் வீட்டில் இருந்தபடியே செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.




