தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை அமலா பால். விஜய், சூர்ய, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார்.
ஆனால் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த ஆடை படத்திற்கு பிறகு அவரது கிராஃப் அப்படியே சரிந்து விட்டது. அந்தப் படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்ததால் பெரும் சர்ச்சைக்கு ஆளானார்.
இதன் பிறகே அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. இதனால் தவித்து வரும் அமலா பால், வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆடை படத்தால் ஏற்பட்ட நெகட்டிவ் விமர்சனத்தால் அவரது நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராக உள்ள அதோ அந்த பறவை போல படத்தையும் ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பட வாய்ப்புகள் இல்லாததால் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை அமலா பால். குளியல் வீடியோ, பிகினி வீடியோ மற்றும் அரைகுறை ஆடையில் தான் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். ஆனாலும் அவருக்கு ஆடை படத்திற்கு பிறகு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
சமீபத்தில் பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அமலாபால் அது குறித்து இன்னும் மௌனம் காத்து வருகிறார்.
இந்நிலையில, தோல் நிறத்தில் மிகவும் இறுக்கமான உடையை அணிந்து கொண்டு சில
புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் நிஜமாவே
ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.! என்று
கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.