கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இதுவரை இல்லாத அளவுக்கு 50 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
இப்படியாக ஊரடங்கு அமலில் இருந்த போதிலும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்ட நபர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. ஒருவேளை ஊரடங்கு இல்லை என்றால் நிலைமையை யோசித்து பார்க்கவே பயமாக உள்ளது.
மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளிலே கொரோனா தொற்று வேகமாக பரவியது. இந்தியா போன்ற 135 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் இப்படியான நோய் பரவினால் இந்தியாவே தலைகீழாக மாறி விடும். மரண ஓலங்கள் விண்ணை முட்டும்.
ஆனால், மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது பாராட்டுக்குரிய விஷயம். இந்த, நேரத்தில் எங்கும் வெளியில் செல்லமுடியாமல் இருக்கும் திரைப்பிரபலங்கள், வீட்டிலேயே தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது பிரபல நடிகை வேதிகா, தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் குட்டை பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய இடுப்பை வெடுக் வெடுக்கன ஆட்டியபடி வெறித்தனமாக போட்ட ஆட்டம் வைரலாகி வருகிறது.
கடந்த 2006 ஆம் ஆண்டு, 'மதராசி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை வேதிகா. ' முனி',' காளை', 'காஞ்சனா', உள்ளிட்ட சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார். இவரால் கோலிவுட் திரையுலகில், முன்னணி இடத்தை பிடிக்க முடியாததால், கன்னடம், தெலுங்கு, திரையுலகில் கவனம் செலுத்த துவங்கினார்.
தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக அணைத்து சினிமா பணிகளும் முடங்கி உள்ளதால், வீட்டில் இருக்கும் வேதிகா, விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, தன்னுடைய மொட்டை மாடியில், குட்டை பாடவையோடு ஆடிய அசத்தல் டான்ஸை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகின்றது.