கோடிகளில் கொட்டிக்கொடுத்தால் கசக்குமா..? என்ன..? - ஜோதிகா வழியை பின் பற்றும் நடிகைகள்..!


கொரோனா ஊரடங்கு காரணமாக தயாரிப்பளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் பிரச்சனை ஒன்று வெடித்துள்ளது. அது தான் படங்களை OTT-யில் ரிலீஸ் செய்வது.

நடிகை ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' டிஜிட்டலில் வெளியாவதற்குத் தடை செய்ய வேண்டாம் என்று தயாரிப்பாளர் தாணு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் வெளியீடாகத் திரைக்கு வர இருந்தது. ஆனால், அமேசான் நிறுவனம் 9 கோடி கொட்டி கொடுத்து வாங்கியதால், நேரடியாக டிஜிட்டலில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. 

இதனால், திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகாது. இந்த முடிவால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் 2டி நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்தையும் வெளியிடுவதில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்த பிரச்சனை முடிவதற்குள் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான பென்குயின் திரைப்படமும் OTT-யில் வெளியாகிறது. இந்த படத்தை தயாரித்த கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகிறது. 

OTT நிறுவனங்கள் பேரம் பேசுவதே இல்லை. படத்தின் பட்ஜெட் எவ்வளவோ அதனுடைய இரட்டிப்பு தொகையை கொடுத்து படத்தை வாங்க முன் வருகின்றன. இதனால், தயாரிப்பாளர்கள் தொல்லை விட்டது டா சாமி என தயாரித்து வைத்துள்ள படங்களை தள்ளி விடவே பார்கிறார்களே தவிர திரையரங்கு உரிமையாளர்கள் நிலை பற்றி யாரும் யோசிப்பதாக கூட தெரியவில்லை.

நடிகர், நடிகைகள் எல்லாம் அதுக்கும் மேலே இருக்கிறார்கள். சமூக பிரச்சனைகளை எல்லாம் பேசும் சூர்யாவே எப்படியோ போங்க எனக்கு பணம் தான் முக்கியம் என திரையரங்கு உரிமையாளர்களை தொங்கலில் விட்டுள்ளார். 

இந்த பிரச்சனை முடிவதற்குள் நடிகைகள் அனுஷ்கா, அஞ்சலிமற்றும் நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ளநிசப்தம் படத்தை ஆன்லைனில் வெளியிட பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம்படக்குழு.

கோடிகளில் கொட்டி கொடுத்தால் கசக்குமா என்ன..? திரையரங்கு உரிமையாளர்கள் எப்படி போனால் என்ன..? டிக்கெட்விக்குறவன் முதல்பைக் ஸ்டேன்ட் லீசுக்கு எடுத்தவன் வரை எக்கேடு கேட்டால் என்ன..?

கோடிகளில் கொட்டிக்கொடுத்தால் கசக்குமா..? என்ன..? - ஜோதிகா வழியை பின் பற்றும் நடிகைகள்..! கோடிகளில் கொட்டிக்கொடுத்தால் கசக்குமா..? என்ன..? - ஜோதிகா வழியை பின் பற்றும் நடிகைகள்..! Reviewed by Tamizhakam on May 17, 2020 Rating: 5
Powered by Blogger.