அவ்ளோ ஆர்வம் அதுல - ஹீரோயின் மட்டுமல்ல இதுவும் பண்றாங்களாம் பிகில் தென்றல்..!


நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான "பிகில்" படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இளம் நடிகை அம்ரிதா ஐயர். 

இதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பெரும்பாலான ரசிகர்களின் மனதை பிகில் தென்றலாக கவர்ந்தார் இவர். இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. மேலும், புதிய பட வாய்ப்புக்களையும் பெற்று கொடுத்துள்ளது. 

பிகில் படத்தில் விஜய் பயிற்சி அளிக்கும் பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக நடித்திருந்தவர் அவர் தான். அடுத்து அம்ரிதா பிக்பாஸ் கவின் ஜோடியாக லிப்ஃட் என்ற படத்தில் நடிக்கிறார். 

இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து அதிக அளவில் வைரலாகி இருந்தது. ரத்தம் தெறித்து இருக்கும் ஒரு லிப்ட் உள்ளே கவின் மற்றும் அம்ரிதா இருவரும் சோகமாக அமர்ந்து இருப்பது போன்று அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்த்து. 

இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த படத்தில் நடிகையாக மட்டுமில்லாமல் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியதாக அம்ரிதா ட்விட்டரில் தற்போது தெரிவித்துள்ளார். 


ஒரே நாளில் நடக்கும் கதை என்பதால் படம் முழுதும் அந்த ஒரே உடையில் தான் அவர் படம் முழுவதும் நடித்து உள்ளாராம். உடையை தேர்ந்தெடுக்கும் போது எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இந்த தகவலை கூறியுள்ளார் அம்ரிதா. 


நடிப்பு மட்டுமின்றி ஆடை வடிவமைப்பிலும் அதிக ஆர்வம் உள்ளதாக கூறுகிறார் அம்ரிதா அய்யர்.

அவ்ளோ ஆர்வம் அதுல - ஹீரோயின் மட்டுமல்ல இதுவும் பண்றாங்களாம் பிகில் தென்றல்..! அவ்ளோ ஆர்வம் அதுல - ஹீரோயின் மட்டுமல்ல இதுவும் பண்றாங்களாம் பிகில் தென்றல்..! Reviewed by Tamizhakam on May 08, 2020 Rating: 5
Powered by Blogger.