மன்மதன் பட ஹீரோயின் சிந்து துலானி என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - வைரலாகும் புகைப்படம்..!


நடிகர் தனுஷ் நடித்த படங்களில் ஒன்று ‘சுள்ளான்’. இந்தப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சிந்து துலானி. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை சிந்து துலானி. 

அதையடுத்து ‘மன்மதன்’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றாலும் சிந்து துலானி பெரிய அளவில் தமிழில் மார்க்கெட் இல்லை. அதையடுத்து தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு வரிசையாக பல படங்களில் நடித்து பிரபலமானார். 

இதற்கிடையில் தமிழில் ஒருசில படங்களில் பாடல்களுக்கு மட்டும் நடனமாடி வந்தார். விக்ரம், அசின் நடிப்பில் வெளியான ‘மஜா’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் நடிகை சிந்து துலானி. 


அந்தப் படத்திற்குப் பின் அவரை காணவில்லை. என்ன ஆனார் என்று தெரியாமல் போனார். ஆனால், தெலுங்கு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார் அம்மணி.

இறுதியாக இவர் நடித்த திரைப்படம் தெலுங்கில் வெளியான "சித்ரகதா" ஆகும். அதனை தொடர்ந்து இவரது நண்பர் ஒருவரை திருமணம் செய்து செட்டிலாகி விட்டார் என்று கூறப்படுகின்றது.


தற்போது அவர் தற்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சிந்து துலானியா இப்படி மாற்றிவிட்டார் என்று ஷாக் ஆகித்தான் கிடக்கிரார்கள்.

மன்மதன் பட ஹீரோயின் சிந்து துலானி என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - வைரலாகும் புகைப்படம்..! மன்மதன் பட ஹீரோயின் சிந்து துலானி என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on May 12, 2020 Rating: 5
Powered by Blogger.