தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி அதன்பின் பச்சைகிளி முத்துச்சரம் என்ற படத்தின் அறிமுகமானாலும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் நடிகை புகழ் பெற்றவர் நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா.
அதன்பின் மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் அறிமுகமாகி நடித்து வருகிறார். அதன்பின் முன்னணி நடிகர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நேரலையாக பாட்டு பாடியும் வருகிறார்.
சமீபத்தில் வெளியாக அவெஞ்சர்ஸ் என்ட் கேம் ஸ்கார்லெட் ஜோஹான்சன் என்ற நடிகைக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் அப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ஒரு ஆன்ந்தம் பாடலை இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் பாடி வெளியிட்டார்.
சினிமாவில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கி வருகிறார் அம்மணி.அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு திருமணமான ஒருவருடன் நெருக்கமாக இருந்ததால் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டேன் என்றும் அதிலிருந்து மீள்வதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டேன் எனவும் கூறி பரபரப்பை கிளப்பினார்.
அவர் கூறிய அந்த திருமணமான நபர் பிரபல அரசியல் வாதி ஒருவரின் மகனும், நடிகருமான ஒருவர் தான் என்று தகவல்கள் கசிந்தன. இந்த பரபரப்பு சற்றே அடங்கியுள்ள நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது சல்லடை போன்ற உடையில் முதுகின் அழகு மொத்தமும் தெரியும் படி, ஊதா நிறத்தில் உதட்டு சாயம் பூசிக்கொண்டு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி லிப்ஸ்டிக் இது..? உள்ள இருக்குறது எல்லாமே தெரியுது என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.