"இந்த மாதிரியான பெண்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.. ஜாக்கிரதை" - DD வெளியிட்ட புகைப்படம்..!


சினிமா நடிகைகளுக்கு இணையாக தற்போது தொலைக்காட்சி நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். 

அப்படி பல வருடங்களாக ரசிகர்களை கவர்ந்து வருபரவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தற்போது கொரோனா லாக்டவுன் போடப்பட்டுள்ள நிலையில் டிடி தனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

டிடி வெளியிட்ட இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. விரைவில் குணமாகவேண்டும் என்று பலரும் அவருக்கு வாழத்து கூறினார்கள். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் திவ்யதர்ஷினி அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவர் வெளியிடும் புகைப்படங்களை விட அதற்கு அவர் வைக்கும் கேப்ஷன் தான் அருமையாக இருக்கும். அந்தவகையில், தற்போது குட்டியான ஸ்டூல் மீது ஏறி நின்று கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, " என்னை யாரவது குள்ளச்சி என்று அழைத்தார்களா...? குட்டையான பெண்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.. ஜாக்கிரதை" என்று கூறியுள்ளார்.