நயன்தாரகிட்ட இருக்க கெட்ட பழக்கம் இது தான் - ரகசியத்தை உடைத்த பிரபல தொகுப்பாளினி DD..!


தமிழ் சினிமாவில் நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு பிறகு சினிமாவுக்கு வந்தாலும் இவரது கிரேஸ் ரசிகர்களிடையே புரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன் காரணமாகவே தற்போது சம்பளத்தை 6 கோடியாக உயர்த்தி விட்டார். ஆறுகோடி கொடுத்தெல்லாம் உங்களுக்கு ஹீரோயினா போட முடியாது என தயாரிப்பாளர்கள் கைவிரித்து விட்டனர். தற்போது, "அண்ணாத்த" படத்தை தவிர வேறு எந்த படமும் கையில் இல்லை.

காதலர் இயக்கும் ஒரு படம்தான் கையில் உள்ளது. அம்மன் வேடத்தில் நடித்த படமும் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இந்நிலையில் வாய்ப்புகள் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என மேலே பார்த்துக் கொண்டிருந்தவருக்கு எதுவும் வந்தபாடில்லை.

இனி இப்படி இருந்தால் வேலைக்காகாது என பழையபடி கவர்ச்சி ரூட்டுக்கு மாறிவிட்டார் நயன்தாரா. அதற்கு சான்று தான் சமீபத்திய விருது விழாவில் முன்னழகை காட்டிக்கொண்டு வந்தார் என்பதும்தான்.

எந்த அளவு வேண்டுமானாலும் கவர்ச்சிக்கு நான் ரெடி. ஆனால், சம்பளத்தை குறைக்க முடியாது என முக்கிய தயாரிப்பாளர்களுக்கு தூதுவிட்டு உள்ளாராம். சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவார் என நம்பி நம்பர் ஒன் இடத்தை கனவு கண்டுகொண்டிருந்த நாயகிகளுக்கு இது பேரிடியாக அமைந்தது.

சும்மாவே நயன்தாராவை ரசிகர்கள் விட மாட்டாங்க, இதுல கவர்ச்சியில் இறங்கிவிட்டால் நம்ம கதி அதோ கதிதான் என செய்வினை வைக்கும் அளவுக்கு சென்று விட்டார்களாம் முன்னணி கதாநாயகிகள் சிலர்.

இந்நிலையில், பிரபல தொகுப்பாளினியான திவ்ய தர்ஷினி சமீபத்தில் ஒரு பேட்டியில் நயன்தார குறித்து தனக்கு தெரிந்த சில விஷயங்களை பேசியுள்ளார். அதில் குறிப்பிடும் படியாக நயன்தாராவிடம் உள்ள கெட்ட பழக்கம் ஒன்றை கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, நயன்தாராவிற்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கோபத்தை உள்ளே வைத்துக்கொண்டு வெளியே போலித்தனமாக பேச மாட்டார். அவர்களுக்கே போன் செய்து நீங்கள் செய்த இந்த விஷயம் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் நான் உங்களிடம் பேச விரும்பவில்லை என்று ஓப்பனாக பேசி விடுவார். இது தான் நாயன்தாரவிடம் உள்ள கெட்ட பழக்கம். மற்றவர்களிடம் இல்லாத நல்ல பழக்கம் என்று சிலாகித்துள்ளார் DD.