ஏ.ஆர்.முருகதாஸ் முதன் முதலாக விஜய்யுடன் கூட்டணி அமைத்த படம் துப்பாக்கி. இந்தப் படத்தில் ஜெயராம், காஜல் ஆகர்வால், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கடந்த, 2012-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தை ஒரு கட்டம் மேல தூக்கி விட்டது. மேலும், மாபெரும் வெற்றிப்படமாகவும் அமைந்தது.
இதையடுத்து கத்தி திரைப்படத்தில் விஜய்-முருகதாஸ் கூட்டணி அமைந்தது.இந்த படமும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. ஆனால், மூன்றாவது முறையாக அதே கூட்டணி அமைத்து வெளியான "சர்கார்" திரைப்படம் எவரேஜ் என்ற நிலையை விட்டு எகிற முடியாமல் திணறியது.
இந்நிலையில் மீண்டும் நான்காவது முறையாக துப்பாக்கி 2 படத்தின் மூலம் இந்தக் கூட்டணி இணைய உள்ளதாது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கி படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தால் பாடல்கள் செம்ம ஹிட் அடித்தன.இந்த படத்திலும், அவரே தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படக்குழு அந்த முடிவை எடுக்க வில்லை.
ஆம்,இசையமைப்பாளர் தமன் துப்பாக்கி 2 படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்று கூறுகிறார்கள். தெலுங்கில் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து வரும் தமனுக்கு தமிழில் இந்த படம் மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என பலரும் கூறுகிறார்கள்.
மேலும், விஜய்-தமன் கூட்டணி இந்த படத்தில் தான் முதன் முதலாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.