துப்பாக்கி 2 ஹீரோயின் இவரா..? - இவருடைய கனவு இப்போதாவது பலிக்குமா..?
நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் 4-வது முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர். ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் உருவான துப்பாக்கி, கத்தி என இரண்டு படங்களும் ஹிட் அடித்தன.
மூன்றாவது உருவான, சர்கார் படம் மட்டும் சறுக்கியது. ஆளும் கட்சி தெரிவித்த எதிர்ப்பு காரணமாக படம் நீந்தி கரை சேர்ந்தது. தற்போது, மீண்டும் நான்காவது முறையாக அவர்கள் இணைய உள்ள படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் எனக் கூறப்படுகிறது.
படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இந்த படத்தை கிட்டத்தட்ட 175 கோடி முதல் 200 கோடி வரை பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள ராஷ்மிகா, தற்போது கார்த்தியின் "சுல்தான்" படம் மூலம் தமிழில் நேரடியாக அறிமுகம் ஆகிறார்.
நம்ம ராஜராஜ சோழனை பற்றி படம் எடுக்க யாருக்கும் யோசனை கூட வருவது இல்லை. ஆனால், வெளிநாட்டில் இருந்து இந்தியா மீது படையெடுத்து வந்த முகலாய மன்னன்ர்கள் பற்றி படமே எடுக்கிறார்கள் என்று "சுல்தான்" படத்தை சுற்றி ஒரு சர்ச்சை வட்டமிட்டு கொண்டிருகின்றது.
இது ஒரு பக்கம் இருக்க, ஏற்கனவே "பிகில்" படத்தில் ராஷ்மிகா மந்தன்னா விஜய் படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ராஷ்மிகாவும் தனது பேட்டிகளில் அதனை வெளிப்படுத்தி வருகிறார். விஜய் 65-ல் ராஷ்மிகாவின் கனவு நிறைவேறுகிறதா..? என பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.
துப்பாக்கி 2 ஹீரோயின் இவரா..? - இவருடைய கனவு இப்போதாவது பலிக்குமா..?
Reviewed by Tamizhakam
on
June 17, 2020
Rating:
