அம்மாடியோவ்..! - 51 வயதிலும் இப்படியா..? - இளம் நடிகைகளுக்கே சவால் விடும் ஃபாத்திமா பாபு..! - வைரலாகும் புகைப்படம்..!


எண்டமோல் ஷைன் நிறுவனம் தயாரித்து வரும் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் முக்கிய போட்டியாளர்களின் ஒருவராக உள்ளார் பாத்திமா பாபு. பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், சினிமாவில் நடிகையாகவும் இருந்த அவருக்கு புதிதாக அறிமுகம் தேவையில்லை.

அவர் பிக்பாஸ் வந்தபிறகு, அவரது பல பழைய சர்ச்சைகளை தோண்டி எடுத்து சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.வீட்டில் உள்ள பலரும் இவருக்கு வயது அதிகம் என்ற காரணத்தினால், இவரை அம்மா அம்மா என்று தான் அழைக்கிறார்கள்.

இவரும் எந்த பிரச்சனை என்றாலும், தன்னுடைய தெளிவான பேச்சால் சுமூகமாக அதனை தீர்த்து சமாதனம் செய்து வைத்து தன்னுடைய அனுபவ முதிர்ச்சியை காட்டுகிறார்.

ஆரம்ப காலத்தில் இவர் மீது சில சர்ச்சையான வதந்திகள் பரவியது. தொலைகாட்சி செய்தி வாசிப்பாளராக இருந்த போது பிரபல அரசியல் கட்சி தலைவர் ஒருவரால் தனிப்பட்ட முறையில் சில அத்துமீறல்களுக்கு உள்ளானார் என்பது தான் அந்த வதந்தி.இது உண்மையா..? இல்லையா..? என்பதெல்லாம் கடவுளுக்கு தான் வெளிச்சம்.

கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கி கிடக்கும் இளம் நடிகைகள் ஆசனம் மற்றும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள்மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில், இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் ஃபாத்திமா பாபுவும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தற்போது 51 வயதாகும் இவர் அசால்டாக "உபவிஷ்ட கோனாசனம்" என்று கூறப்படும் ஆசனத்தை செய்து காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,


அம்மாடியோவ்..! - 51 வயதிலும் இப்படியா..? - இளம் நடிகைகளுக்கே சவால் விடும் ஃபாத்திமா பாபு..! - வைரலாகும் புகைப்படம்..! அம்மாடியோவ்..! - 51 வயதிலும் இப்படியா..? - இளம் நடிகைகளுக்கே சவால் விடும் ஃபாத்திமா பாபு..! - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 05, 2020 Rating: 5
Powered by Blogger.