சமீப காலமாக நடிகைகள் கோக்கு மாக்கான புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதும் அதற்கு எக்குதப்பாக கமெண்ட் செய்யும் நபர்களை நடிகைகள் திட்டுவதும் வாடிக்கையாகி வருகின்றது.
தங்களுடைய படங்களுக்கு மோசமான் அருவருப்பான கருத்தை கூறும் அதுபோன்ற நபர்களுக்கு ஒரு சில நடிகைகள் தகுந்த பதிலடி கொடுத்துவிடுகின்றனர்.
ஆனால் பல நடிகைகளால் அது போல் செய்ய முடிவதில்லை. இந்நிலையில் நடிகை ஷெரின், தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்ட நபர் குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவரது பதிவில், "என்னுடைய உடலை பற்றி கமெண்ட் செய்வது இந்த ஆளுக்கு மிகவும் சுலபமாக தெரிகிறது. அவருடைய பிரோபைலை பாருங்கள். தன்னை ஒரு தேவதையாக காட்டிக்கொள்ள நினைக்கிறார். ஆனால் நிஜத்தில் இந்த ஆள் ஒரு அருவருப்பான ஆணாதிக்கவாதி.
எனக்கு நீ குறுஞ்செய்தி அனுப்பியது சந்தோஷமான விஷயம் தான். நிச்சயம் உன் மீது கடும் நடவடிக்கை பாயும்" என தெரிவித்துள்ளார். ஷெரினின் இந்த துணிச்சலை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். பெண்கள், அதிலும் குறிப்பாக நடிகைகள் இதுபோல் பதிலடி கொடுத்தால் தான், சில துஷ்ட சக்திகளை அழிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.



