ஆங்கில பத்திரிக்கை அட்டைப்படதிற்கு கட்டுகடங்கா கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள "காற்று வெளியிடை" நாயகி அதிதி ராவ்..!

 
இந்தி திரையுலகில் டெல்லி 6, ராக்ஸ்டார், மர்டர் 3, குபேசுரத், பத்மாவத் ஆகிய படங்களில் நடித்த நடிகை அதிதி ராவ் . இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பின்னர், இயக்குனர் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார். இதன்பின்னர், இயக்குனர் மிஷ்கினின் சைக்கோ படத்தில் நடித்திருந்தார்.

தற்போது விஜய் சேதுபதியுடைய துக்ளக் தர்பார், பிருந்தா மாஸ்டரின் இயக்கத்தில் வெளியாகும் ஹே சினாமிகா படங்களில் நடித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வரும் நிலையில், வீட்டில் சமையல், இசை, நடனம் போன்ற வீடியோ காட்சிகளை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். இதனைப்போன்று நடிகை அதிதி ராவ் களரி பயிற்சி செய்கிறேன் என்று கூறி வீடியோ காட்சி பதிவு செய்துள்ளார்.
 

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படதிற்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றன.

ஆங்கில பத்திரிக்கை அட்டைப்படதிற்கு கட்டுகடங்கா கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள "காற்று வெளியிடை" நாயகி அதிதி ராவ்..! ஆங்கில பத்திரிக்கை அட்டைப்படதிற்கு கட்டுகடங்கா கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள "காற்று வெளியிடை" நாயகி அதிதி ராவ்..! Reviewed by Tamizhakam on June 24, 2020 Rating: 5
Powered by Blogger.