குரல்களை கேட்ட துவங்கிய சுஷாந்த் - மிரண்டு போன காதலி - இப்படியெல்லாம் செய்தாரா சுஹாந்த்..? - நெஞ்சை உறைய வைக்கும் தகவல்கள்..!


தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாயகனாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 34.

அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், ‘ஆறு மாத காலமாக சுஷாந்த் சிங் மன அழுத்தத்துக்கான சிகிச்சையில் இருந்துவந்துள்ளார்.

அவருடைய உடல் பிரதே பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வுகள் தற்கொலை என்பதை உறுதிப்படுத்துகிறது. இதுவரையில், தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள், அவரது உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட நேரத்தில், சமையற்காரர்கள் இருவரும், வீட்டு வேலை செய்யும் நபர் ஒருவரும், அவருடைய நண்பர் ஒருவர் வீட்டில் இருந்துள்ளனர் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவரது உடல் நேற்று பிரேத பரிசோதனைக்காக டாக்டர் ஆர்.என். கூப்பர் நகராட்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை இப்போது நிறைவடைந்துள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கையில் இது தற்கொலை வழக்கு என்று கண்டறியப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுஷாந்தின் உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருளை கண்அறிய பகுப்பாய்வுக்காக ஜே.ஜே மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன. சுஷாந்த்தின் இறுதி சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை இரவு பாட்னாவிலிருந்து மும்பைக்கு வந்து அவரது தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களால் செய்யப்படும்.

இந்த நிலையில் சுஷாந்த் மரணம் குறித்து பேசியுள்ள அவர் தாய் மாமா, அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று நாங்கள் நினைக்கவில்லை, அவரது மரணத்தின் பின்னணியில் ஒரு சதி இருப்பதாக தெரிகிறது.

அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என கூறி உள்ளார். குறிப்பாக அவரது மாமனார் மற்றும் குடும்பத்துடன் நெருக்கமான பலர் அவரது மரணத்தில் ஒரு 'சதி' இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க, திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் நெருங்கிய நண்பரான எழுத்தாளர் சுஹ்ரிதா செங்குப்தா, சுஷாந்த் சிங் பற்றி .கூறியுள்ள தகவல்கள் தூக்கி வாரிப்போடுகின்றன. அவருக்கு மன அழுத்தம் என்பதை தாண்டி வேறு எதோ ஒரு விதமான நோய் இருந்துள்ளது என்று யூகிக்க முடிகின்றது. சுருக்கமாக சொன்னால் "3" படத்தில் தனுஷிற்கு இருந்த நோய் போல.

சுஷாந்த் சிங் ஒரு முறை பட வாய்ப்பு கேட்டு பட் சாபை சந்திக்க வந்திருந்தார். இவருக்கு, சினிமா தவிர்த்து குவாண்டம் ஃபிசிக்ஸ் குறித்து பேச முடியும். மிகவும் உற்சாகமாக பேசுவார். அப்போது, பட் சாப் சுஷாந்த் சிங்கின் உற்சாகத்திற்கு கீழ் இருக்கும் மன அழுத்தத்தை அடையாளம் காட்டினார்.

இந்த மன அழுத்தத்திற்கு மருந்துகள் தான் ஒரு தீர்வு. ஆனால், அதனை உட்கொள்ள சுஷாந்த் சிங் பல நேரங்களில் மறுத்தார். அவற்றை, தவிர்க்க முயற்சி செய்தார். ஆனால்,அவருடைய காதலி ரியா அவர் மருந்துகள் எடுத்துக்கொள்வதை உறுதிபடுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார். பல நேரங்களில் போராடி அவரை மருந்துகளை எடுத்துக்கொள்ள வைத்துள்ளார்.

நிலைமை சரியாகிவிடும் என்று நம்பினார். ஆனால். நிலைமை மோசமாகி கொண்டே போனது. என்னை மக்கள் எல்லாம் சேர்ந்து கொலை செய்யப்போகிறார்கள். நான் எப்படி அவர்களிடம் இருந்து தப்பிப்பது என்று பலமுறை அவரது காதலியிடம் கேட்டுள்ளாராம்.

ஒரு நாள் சுஷாந்த் சிங் மற்றும் அவரது காதலி ரியா இருவரும் அவரது வீட்டில் அனுராக் காஷ்யாப்-ன் படத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, ரியாவிடன் "நான் அனுராக் கஷ்யாபின் பட வாய்ப்பை மறுத்து விட்டேன். அவர் இப்போது என்னை கொலை செய்ய வரப்போகிறார்" என்று பயத்துடன் சொல்லியிருக்கிறார்.

இதனால் மிரண்டு போன ரியா அவருடன் இருப்பது நமக்கும் ஆபத்தை விளைவித்து விடும் என்று அவரை தவிர்க்க ஆரம்பித்துள்ளார். மேலும், சுஷாந்த் சிங் தனிமையில் இருக்கும் போது அவருக்கு அருகில் யாரே நின்று பேசுகிறார்கள் என்று அடிக்கடி உணர தொடங்கியுள்ளார். இதனால், மிகவும் பாதிக்கப்பட்ட ரியா முடிவில், அவருடன் இருந்த காதலை முறித்துக்கொண்டார்.

லாக்டவுன் காரணமாக இவர் தனிமையில் இருப்பது மற்றும் இவருக்கு இருந்த மனநிலை இரண்டும் சேர்ந்து அவரை மோசமான மன அழுத்தத்திற்கு தள்ளிவிட்டு விட்டது தான் அவரது தற்கொலைக்கு காரணமாக அமைந்து விட்டது என்று கூறியுள்ளார் எழுத்தாளர் சுஹ்ரிதா செங்குப்தா.

குரல்களை கேட்ட துவங்கிய சுஷாந்த் - மிரண்டு போன காதலி - இப்படியெல்லாம் செய்தாரா சுஹாந்த்..? - நெஞ்சை உறைய வைக்கும் தகவல்கள்..! குரல்களை கேட்ட துவங்கிய சுஷாந்த் - மிரண்டு போன காதலி - இப்படியெல்லாம் செய்தாரா சுஹாந்த்..? - நெஞ்சை உறைய வைக்கும் தகவல்கள்..! Reviewed by Tamizhakam on June 15, 2020 Rating: 5
Powered by Blogger.