"குடிச்சுட்டு மட்டையாக கூடாது. ஆனால்,..." - ப்ரியா ஆனந்திற்கு எவ்ளோ பெரிய மனசு..! - வைரலாகும் வீடியோ..!
தமிழ் திரையுலகில் வெளிவந்த ‘வாமனன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த். இவர் அடுத்தடுத்து மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்துள்ளார்.
இவர் நடிகர் சிவகார்த்திகேயனோடு நடித்த எதிர்நீச்சல் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தின் மூலம் இவர் பெரிதும் பேசப்பட்டு வந்தார். இவர் இந்திய சினிமாவில் வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆனாலும் முன்னணி கதாநாயகர்களோடு நடிக்கும் வாய்ப்பு மட்டும் அவருக்கு கிடைக்க வில்லை.
இந்த நிலையில் அவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சினிமாவில் தன்னுடைய இருப்பை உறுதிபடித்திக்கொண்டே வருகிறார்.
இந்நிலையில், சாலையில் சென்று கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர் இன்று தனக்கு பிறந்தநாள் என்று கூற அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி சில அறிவுரைகளையும் கொடுத்துள்ளார்.
பைக்கில் ஊர் சுத்தும் போது ஹெல்மெட் போட வேண்டும். குடிச்சுட்டு மட்டையாக கூடாது. But, Happy Birthday என்று கூறியுள்ளார். ரசிகர்களை கண்டாலே.. கண்டும் காணாமல் போகும் நடிகைகள் மத்தியில் ரசிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதுடன் அவருக்கு அட்வைசும் செய்துவிட்டு சென்றுள்ள ப்ரியா ஆனந்திற்கு எவ்ளோ பெரிய மனசு என சிலாகித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
இதோ அந்த வீடியோ,
"குடிச்சுட்டு மட்டையாக கூடாது. ஆனால்,..." - ப்ரியா ஆனந்திற்கு எவ்ளோ பெரிய மனசு..! - வைரலாகும் வீடியோ..!
Reviewed by Tamizhakam
on
June 03, 2020
Rating:
