"இப்போ தான் தெரியுது.. மனுஷன் எதுக்கு அழுதார்ன்னு..." - திடீர் ட்ரெண்டாகும் சிவகார்த்திகேயன் பேச்சு..!


ரெமோ படம் வெளியாகியிருந்த நேரம். படத்தின் வெற்றி விழா மேடையில் என்னை தடுக்கிறார்கள், என்னுடைய படத்தை தடுக்கிறார்கள் என்று தன்னுடைய கஷ்டத்தை கூறி அழுது புலம்பினார் நடிகர் சிவகார்த்திகேயன்.

எப்போதும், துடுக் துடுக்கெனவும், துரு துருவெனவுமே சிவகார்த்திகேயனை பார்த்தே பழகிய ரசிகர்களுக்கு அன்று அவர் மேடையில் அழுதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த மேடை நிகழ்ச்சியால் படத்துக்கு எக்க சக்க ப்ரோமோஷன் ஆகி படம் ஹிட் அடித்தது. அப்போது பலரும் இதெல்லாம் பப்லிசிட்டி ஸ்டன்ட், படத்தை ஓட வைக்கும் முயற்சி என்று கிண்டலடித்தார்கள்.

ஆனால், இப்போது அந்த அழுகைக்கான அர்த்தம் புரிந்துள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்-ன் தற்கொலை தந்த அதிர்ச்சி ஒரு பக்கம் இருக்க, அந்த அதிர்ச்சியால் பாலிவுட்டின் கருப்பு பக்கங்கள் வெளிவர தொடங்கியுள்ளன.

நேரடியாகவே இந்த நடிகர்கள் தான் சுஷாந்த் சிங்கின் வாய்பை பறித்து அவருடைய படங்களுக்கு பல்வேறு வகையில் இடையூறு செய்து அவரை நோகடித்து , மனதளவில் கொடுமை படுத்தி கொன்றவர்கள் என்று குற்றசாட்டுகள் வைக்கிறார்கள்.

நீதி மன்றத்தில் வழக்கும் போட்டிருகிறார்கள். சுஷாந்த் சிங் இறந்து விட்ட
சோகத்தில் இப்படி பழி போடுகிறார்கள் என்றெல்லாம் இதனை கடந்து விட்டு போக முடியவில்லை என்பது தான் உண்மை.

உண்மையிலேயே புதிய நடிகர்கள் யாரும் உள்ளே புகுந்து விட கூடாது என்பதில் குறியாக உள்ளனர் சில பாலிவுட் வாரிசுகள் என்பது நமக்கு தெளிவாக தெரிகின்றது.

சக நடிகர் மறைவுக்கு முன்னணி பாலிவுட் ஹீரோக்கள் யாரும் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. கேட்டால், சுஷாந்த் சிங் என்பது யார்..? என்று தெனாவெட்டாக கேட்கும் அளவுக்கு இருக்கிறது இந்த பாலிவுட் மாபியா கும்பல்.

இதே போல தான் சிவகார்த்திகேயனும் வஞ்சிக்கப்பட்டு இருப்பார். இது தான் அவருடைய அந்த அழுகைக்கு காரணமாக இருந்திருக்கும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

"இப்போ தான் தெரியுது.. மனுஷன் எதுக்கு அழுதார்ன்னு..." - திடீர் ட்ரெண்டாகும் சிவகார்த்திகேயன் பேச்சு..! "இப்போ தான் தெரியுது.. மனுஷன் எதுக்கு அழுதார்ன்னு..." - திடீர் ட்ரெண்டாகும் சிவகார்த்திகேயன் பேச்சு..! Reviewed by Tamizhakam on June 18, 2020 Rating: 5
Powered by Blogger.