இவருக்கு இப்படி ஒரு நிலைமையா..? காமெடி நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா..? - மனதை ரணமாக்கும் தகவல்..!


நான் பெரிய அண்டா வச்சிருக்கேன் அதுக்கு ஈயம் பூசனும் அடுப்பை ரெடி பண்ணி வைங்க என்று கவுண்டரிடம் சொல்லி விட்டு சென்று ஒரு ரசீதை கொண்டு வந்து அண்டாவ அடகு வச்சிருக்கேன் அதை மீட்டதும் ஈயம் பூசிடலாம் என்று கவுண்டரை கடியாக்கியவர் தான் இந்த கருப்பு சுப்பையா.

கருப்பு சுப்பையா என்றவுடன் நம் நினைவுக்கு ஒரு நகைச்சுவை காட்சி வந்து நிற்கும். கவுண்டரை கடுப்பேற்றி கோவத்தை கிளறி விட்டதால் அவரின் உடல் முழுக்க ஈயம் பூசி அனுப்பி விடுவார் கவுண்டர்.

ஆனால், இப்படி நம்மை சிரிக்க வைத்த அந்த கருப்பு சுப்பையாவின் கடைசிகாலம் மிகவும் மோசமாக, அதிர்ச்சி தரும் வகையில் இருந்திருக்கிறது. காமெடி ஜாம்பவான் கவுண்டமணியுடன், செந்திலுக்கு ஈடுகொடுத்து அதிக படங்களில் நடித்தவர் கருப்பு சுப்பையா.

இவர் கருப்பாக இருந்ததால் கருப்பு சுப்பையா என அழைக்கப்பட்டார். இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டத்தின் திருமங்கலம். கவுண்டமணியோடு 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக, பெரியமருது, ஜல்லிக்கட்டுக்காளை, கட்டபொம்மன், செந்தூரப்பூவே, பட்டத்துராணி என இவர் நடித்த காமெடிகள் இந்த படங்களில் பெரிதும் பேசப்பட்டன. பெரியமருது படத்தில் ‘’ஈயம் பூசும் கேரக்டர்” இவர் நடிப்பில் இன்று பார்த்தாலும் வயிறு வலிக்கச் சிரிக்கவைக்கும்.

ஆனால் கருப்பு சுப்பையாவின் கடைசிகாலம் மிகவும் சோகமாகவே நகர்ந்தது. தன்னுடைய கடைசி காலத்தில் போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் வருமானம் இன்றி தவித்திருக்கிறார் சுப்பையா.கடைசி காலத்தில் கூட இருந்து கவனிக்கக் கூட ஆள்கள் இன்றி மனம் உடைந்து போய் காணபட்டாராம். கடந்த 2013-ம் ஆண்டு கவனிக்க ஆள்கள் இன்றி தனிமையில் உயிரிழந்தார் கருப்பு சுப்பையா.

அவரது நகைச்சுவை மூலம் நம்மையெல்லாம் இன்றும் சிரிக்க வைக்கும் கருப்பு சுப்பையாவின் நிஜ வாழ்க்கையில் இவ்வளவு பெரிய வலி இருந்திருக்கிறது என்பது வேதனை தான்.

இவருக்கு இப்படி ஒரு நிலைமையா..? காமெடி நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா..? - மனதை ரணமாக்கும் தகவல்..! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா..? காமெடி நடிகர் கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா..? - மனதை ரணமாக்கும் தகவல்..! Reviewed by Tamizhakam on June 10, 2020 Rating: 5
Powered by Blogger.