ஒரே ஒரு போட்டோ..! - ஒட்டு மொத்த மானம், மருவாதியும் க்ளோஸ்..! - வாங்கி கட்டிக்கொண்ட தமன்னா..!


சமீபத்தில் உலகையே உலுக்கிய ஒரு சம்பவம் அமெரிக்க கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு உலகம் முழுவதும் ஆதரவு குரல் கேட்டு வருகிறது.

இந்திய திரைப்பிரபலங்கள் பலரும் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இனப்பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாக நடிகை தமன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தனது முகம் மற்றும் கழுத்தில் கருப்பு நிறத்தில் கை அச்சு இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, "உங்களுடைய அமைதி ஒருபோதும் உங்களை காப்பாற்றாது. மனிதனாக இருந்தால் என்ன? மிருகமாக இருந்தால் என்ன? எல்லா உயிரும் முக்கியம் தான். உயிரை கொல்வது இயற்கையின் நியதிக்கு எதிரானது. நாம் மீண்டும் மனிதனாக கற்றுக்கொள்ள வேண்டும். அன்பு செய்வோம்", என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், #Alllivesmatter, "WakeupWorld ஆகிய ஹேஷ்டேக்குகளையும் அவர் டேக் செய்திருந்தார். தமன்னாவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவரைஏகத்துக்கும் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

ஆரம்ப காலம் முதல், முகம் வெள்ளை ஆக வேண்டுமா..? இதை பூசுங்க..! அதை பூசுங்க..! என அழகு சாதன பொருட்களுக்கு விளம்பரம் செய்த உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது நிறப்பாகுபாட்டை பற்றி பேச ஆரம்பித்து விட்டனர்.

ஆத்தாடி, "வாண்டடாக வந்து வண்டி ஏறி இப்படி வாங்கிக்கட்டிக்கிட்டோமே" என புலம்பி வருகிறாராம் தமன்னா. அவரை மட்டுமல்ல, இந்த போராட்டம் தொடர்பாக பதிவிட்ட நடிகைகள் திஷா பதானி, பிரியங்கா சோப்ரோ போன்றோரையும் இதே போல் வறுத்தெடுத்துவிட்டனர் நெட்டிசன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒரு போட்டோ..! - ஒட்டு மொத்த மானம், மருவாதியும் க்ளோஸ்..! - வாங்கி கட்டிக்கொண்ட தமன்னா..! ஒரே ஒரு போட்டோ..! - ஒட்டு மொத்த மானம், மருவாதியும் க்ளோஸ்..! - வாங்கி கட்டிக்கொண்ட தமன்னா..! Reviewed by Tamizhakam on June 07, 2020 Rating: 5
Powered by Blogger.