திருமணம் ஆகி ஒரே வருடம் - நான்கு மாத கர்ப்பம் - பிரபல தமிழ் நடிகைக்கு நேர்ந்த கொடுமை..! - கல் நெஞ்சையும் கரைக்கும் சம்பவம்..!
இந்த 2020-ம் ஆண்டு நம்பமுடியாத பல அதிர்ச்சிகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக திரையுலக வட்டாரத்தில். ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது.
இந்நிலையில் பிரபலங்களின் திடீர் மரணம் ரசிகர்களிடம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 39.
இந்த செய்தி கன்னட திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் சமூக ஊடகங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
சிரஞ்சீவி சார்ஜாவும், நடிகை மேக்னா ராஜும் காதலித்து கடந்த 2018, மே மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். மேக்னாவின் காதல் கணவர் சிரஞ்சீவி, நேற்று தொலைபேசியில் தனது தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தபோது சரிந்து விழுந்ததாக தெரிகிறது.
அதன் பின்னர், அவர் சாகர் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, சிரஞ்சீவியின் மனைவி மேக்னா ராஜ் தற்போது நான்கு மாத கர்பிணி என்ற தகவல் தான் அது.
அடுத்த மாதம் இதனை அறிவிக்க காத்திருந்த இந்தத் தம்பதியினர் வாழ்வில் இப்படி ஒரு மீளா துயர் வந்துள்ளது. இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது என கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் ரசிகர்கள்.
திருமணம் ஆகி ஒரே வருடம் - நான்கு மாத கர்ப்பம் - பிரபல தமிழ் நடிகைக்கு நேர்ந்த கொடுமை..! - கல் நெஞ்சையும் கரைக்கும் சம்பவம்..!
Reviewed by Tamizhakam
on
June 08, 2020
Rating:
