"முத்து" படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சில மணி நேரத்தில் நடிக்கவே மறுத்து பின்வாங்கிய ஜெயராம்..! - இது தான் காரணமாம்..!
கடந்த 1995-ம் ஆண்டு வெளியாகி கிட்ட தட்ட 20 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படம் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான "முத்து". இந்த படத்தில் தன்னை நடிக்க அழைத்ததாகவும் ஆனால், முதலில் ஒப்புக்கொண்டு கொஞ்ச நேரத்தில் நடிக்க மறுத்தவிட்டேன் என்றும் நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிக்கு உலகளவில் ரசிகர்களைப் பெற்றுத்தந்த திரைப்படம் முத்து. ஜப்பானில் மிகப்பெரிய வெற்றி பெற்றது அந்த திரைப்படம். தென்மாவின் கொம்பத்து எனப்படும் மலையாளப் படத்தின் தழுவல் தான்.
இந்த படத்தில் ரஜினி வேலைக்காரனாகவும், நடிகர் சரத்பாபு எஜமானராகவும் நடித்திருந்தனர். சரத்பாபு நடித்த அந்த கதாபாத்திரத்தில் தான் நடிகர் ஜெயராமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ரஜினி படம் என்றதும் ஒப்புக்கொண்ட அவரிடம் கதை கூறப்பட்டது. ஆனால், கதையை கேட்டு நடிக்க மறுத்துவிட்டார். இப்போது, இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் ஏன் பட வாய்ப்பை மறுத்தேன் என்பதற்க்கான காரணத்தை கூறியுள்ளார்.
முத்து படத்தின் கதையின் படி ஒரு காட்சியில் ரஜினியை அறைவது போன்ற காட்சி ஒன்று படத்தில் இருந்துள்ளது. இந்த ஒரே காரணத்துக்காக தான் நான் நடிக்க மறுத்ததாகக் கூறியுள்ளார் ஜெயராம்.
"முத்து" படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சில மணி நேரத்தில் நடிக்கவே மறுத்து பின்வாங்கிய ஜெயராம்..! - இது தான் காரணமாம்..!
Reviewed by Tamizhakam
on
June 05, 2020
Rating:
