லிப்ஸ்டிக் கூட போடல - நீங்களே ஒரு முடிவுக்கு வராதிங்க ப்ளீஸ்..! - கதறும் பிக்பாஸ் ரேஷ்மா மற்றும் சஞ்ஜனா சிங்..!
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமாக இருந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் தான் சுஷாந்த் சிங் ராஜ்புட்டுக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது.
அந்த படம் ரிலீஸானதில் இருந்து ரசிகர்கள் சுஷாந்த் சிங்கை ரீல் தோனி என்று அழைத்து வந்தனர்.தோனி படத்தால் இந்தியா முழுவதும் பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் உள்ள தன் வீட்டில் இன்று மதியம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதை திரையுலக பிரபலங்களாலும், ரசிகர்களாலும் நம்ப முடியவில்லை. ஆனால் அது தான் உண்மை.சுஷாந்த் சிங் ராஜ்புட் இறந்தது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டத்து. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுஷாந்தின் சிங்கின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. ஆம்புலன்ஸை பார்த்தே ரசிகர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். இந்த சோக அலைகள் ஒரு பக்கம் இருக்க சமூக வலைத்தளங்கள் மூலமாக நடிகைகள், நடிகர் என பலரும் சுஷாந்த் சிங் மறைவுக்கு தங்களுடைய இரங்கல்களை கூறி வருகிறார்கள்.
அந்த வகையில், பிக்பாஸ் நடிகை ரேஷ்மா மற்றும் நடிகை சஞ்சனா இருவரும் சுஷாந்த் ஷெட்டிக்கு இரங்கல் தெரிவிக்க இன்ஸ்டாகிராமில் லைவ் வந்தனர். அப்படி வந்தவர்களை, இரங்கல் தெரிவிக்க கூட மேக்கப் போட்டுக்கிட்டு தான் வருவீங்களா..? என்றும் பப்ளிசிட்டி பைத்தியத்திற்கு அளவே இல்லையா..? என்று கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.
இதனால் கடுப்பான இருவரும் நாங்கள் பப்ளிசிக்காக பண்றோமா..? மேக்கப்ப் போட்டிருக்கோமா..? லிப்ஸ்டிக் கூட போடல என்று கதறி அழுதபடி இப்படி ஒருவரை பற்றி முடிவுக்கு வருவதை நிறுத்துங்கள்.
நாங்ளும் மனிதர்கள் தான் ப்ளீஸ் என்று அழுகின்றனர். மறைந்த நடிகர் சுஷாந்த் ஷெட்டிக்கு இரங்கல் தெரிவிக்க வந்தவர்களை இப்படிகோபப்படுத்தி விட்டனரே சில ரசிகர்கள் என அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள் சக ரசிகர்கள்.
லிப்ஸ்டிக் கூட போடல - நீங்களே ஒரு முடிவுக்கு வராதிங்க ப்ளீஸ்..! - கதறும் பிக்பாஸ் ரேஷ்மா மற்றும் சஞ்ஜனா சிங்..!
Reviewed by Tamizhakam
on
June 14, 2020
Rating:
