"சம்பவம் நடப்பதற்கு மூன்று நாட்கள் முன்பு தான்..." - நொறுங்கும் வேலைக்காரர்கள்..! - மனதை ரணமாக்கும் தகவல்கள்..!


கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து, இந்திய அளவில் மட்டுமல்லாது, உலகம் முழுக்க கவனம் ஈர்த்தவர் பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத், சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூக்குக் கயிறு இறுகியதால் மூச்சு திணறி சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்திருந்தது.தற்கொலை முடிவுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய திரைப்படத்தில் கூட நடித்தவர்தான் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

அப்படிப்பட்டவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற கேள்வி அவரது ரசிகர்களை துளைத்து எடுத்தது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஹேஷ்டேக் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சுஷாந்த் வீட்டில் வேலை செய்து வந்த வேலைக்காரர்கள் சில விஷயங்களை பகிர்ந்தது கொண்டிருகிறார்கள். சுஷாந்த் சிங் இறப்பதற்கு மூன்று நாட்கள் முன்பு தான் அனவைரையும் அழைத்து சம்பளம் கொடுத்தார் எனவும் வழக்கத்திற்கு மாறாக அதிக பணம் கொடுத்தார். இதற்கு மேல் என்கிட்டே பணம் இல்லை என்றும் கூறினாராம்.

கொரோனா ஊரடங்கால் நாங்கள் வேறு எந்த வீட்டுக்கும் வேலைக்கு செல்லாமல் இருக்கிறோம் என்பதால் தான் அதிக சம்பளம் கொடுத்தார் என நினைத்தோம் ஆனால், இப்படியெல்லாம் நடக்கும் என கனவில் கூட நினைத்து பார்க்க வில்லை என்று நொறுங்கிபோயுள்ளனர் வேலைக்காரர்கள்.

சுஷாந்த் சிங் தங்கியிருந்து வீட்டின் வாடகை மட்டும் 4.5 லட்ச ரூபாயாம். கடந்த ஒரு வருடமாகவே அவருக்கு வரும் பட வாய்ப்புகளை தடுக்க பல பாலிவுட் நடிகர்கள் முயற்சி செய்து தடுத்து வந்துள்ளனர். இதனால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளார் சுஷாந்த் என்று தெரிய வந்துள்ளது.

"சம்பவம் நடப்பதற்கு மூன்று நாட்கள் முன்பு தான்..." - நொறுங்கும் வேலைக்காரர்கள்..! - மனதை ரணமாக்கும் தகவல்கள்..! "சம்பவம் நடப்பதற்கு மூன்று நாட்கள் முன்பு தான்..." - நொறுங்கும் வேலைக்காரர்கள்..! - மனதை ரணமாக்கும் தகவல்கள்..! Reviewed by Tamizhakam on June 19, 2020 Rating: 5
Powered by Blogger.