‘இறுதிச் சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் டீஸர் மட்டும் வெளியாகி தற்போது வரை மாஸ் பண்ணிக்கொண்டிருக்கிறது. அபர்ணா பாலமுரளி, சூர்யா நடிக்கும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கும் அபர்ணா முரளி முன்பே ஜிவி பிரகாஷுடன் சர்வம் தாள மயம் என்கிற படத்தில் நடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
இந்த படத்தின் டீசரில் சூர்யா தனது சொந்தக் குரலில் பாடியுள்ள ஊர்க்குருவி பருந்தாகுது பாடல் இடம்பெற்றுள்ளது. மேலும் கதைப்படி சூர்யா பேசும் எதார்த்தமான வசனங்களும் அதிகம் இடம்பெற்றுள்ளன.
சுதா கொங்கரா – சூர்யாவை வைத்து படம் இயக்கியிருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது . சூரரைப் போற்று திரைப்படம் ஜூன் மாதம் இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் ஹீரோயின் அபர்ணா முரளியின் கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வலம் வந்து கொண்டிருகின்றன.
Tags
Aparna Balamurali