"ரசிகர்கள் இதை தான் விரும்புகிறார்கள் - அதனால், தயவு செய்து..." - ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடி..!


கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இர்ஃபான் கான், ரிஷி கபூர், இசையமைப்பாளர் வஜித் கான் என பாலிவுட்டின் முன்னணி கலைஞர்கள் மூவர் இறந்திருக்கும் நிலையில் தற்போது சுஷாந்த் சிங்கின் மறைவும் பாலிவுட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவரது மரண செய்தி கேட்டு பிரதமர் தொடங்கி அரசியல் பிரபலங்களும், திரைத்துறை மற்றும் முன்னணி கிரிக்கெட் விளையாட்டு வீரர்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் நடித்த கடைசி திரைப்படமான Dil Bechara என்ற படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், சுஷாந்தின் ரசிகர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது ரசிகர்கள் #DilBecharaOnBigScreen என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கினர். ரசிகர்கள் உருவாக்கிய அதே ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் ட்வீட் செய்துள்ளார்.

அவரது ரசிகர்கள் சுஷாந்தின் கடைசி படத்தை தியேட்டரில் பார்க்க விரும்புகிறார்கள் படக்குழு இதனை பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். சுஷாந்த் சிங்கின் கடைசி படமான இந்த படத்திற்கு இசையமைத்தது ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பல பாலிவுட் பிரபலங்கள் இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வது'சுஷாந்த் சிங்கிற்கு நாம் கொடுக்கும் மரியாதையாக இருக்கும். அதனால், தயவு செய்து தியேட்டரில் ரிலீஸ் செய்யுங்கள் என்று கூறி வருகிறார்கள்.

"ரசிகர்கள் இதை தான் விரும்புகிறார்கள் - அதனால், தயவு செய்து..." - ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடி..! "ரசிகர்கள் இதை தான் விரும்புகிறார்கள் - அதனால், தயவு செய்து..." - ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடி..! Reviewed by Tamizhakam on June 16, 2020 Rating: 5
Powered by Blogger.