"இரண்டரை மணி நேரத்துக்கு இவ்ளோ வாங்குவேன்..அப்போ 5 மணி நேரத்துக்கு.." - தெறித்து ஓடிய தயாரிப்பாளர்..!


சமீப காலமாக OTT தளங்கள் சினிமா துறையில் கோலோச்சி வருகின்றன. கொரோனா லாக்டவுன் காரணமாக மட்டுமே OTT தளங்களுக்கு மவுசு கூடியுள்ளது. கொரோனா முடிந்து திரையரங்குகள் திறந்து விட்டால் OTT தளங்கள் காணாமல் போய்விடும் என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

ஆனால், OTT தளங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அதன் படி, படங்களை தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து வாங்காமல் நேரடியாக படங்களை தயாரிக்கும் முடிவுக்கு வந்துள்ளன. இதன் மூலம் பாதிக்கு பாதி செலவை மிச்சப்படுத்த முடியும் என்பதால் OTT தளங்கள் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளன.

தயாரிப்பாளர் 10 கோடி முதலீடு செய்து படம் எடுத்தால் அதனை 20 கோடிக்கு விலை கொடுத்து விற்பனை செய்து விடுகிறார்கள். ஆனால், நேரடியாக படத்தை தயாரித்தால் அதனை 10 கோடியிலே முடித்து விடலாம் என்று பலே யோசனையில் இருக்கின்றன OTT தயாரிப்பு நிறுவனங்கள்.

இந்நிலையில், அந்த புயல் காமெடி நடிகரை வைத்து ஹிட் அடித்த காமெடி படத்தின் இரண்டாம் பாகத்தை வெப்சீரிஸாக எடுக்க திட்டமிட்டு விரல் நடிகரின் பெயர் கொண்ட இயக்குனரிடம் சம்மதம் வாங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

என்ன படம்னு தெரியலையா..?ஏற்கனவே படமாக எடுக்க முயற்சி செய்து சில பல பூசல்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளதே அந்த படம் தான்.

இயக்குனரிடம் சம்மதம் வாங்கிவிட்ட மகிழ்ச்சியில், அந்த காமெடி நடிகரை தொடர்பு கொண்டு படத்தில் நடிக்க கேட்டுள்ளது. ஆனால், நடிகரோ திரைப்படம் என்றால் 2.5 மணி நேரம். அதுக்கு நான் இவ்ளோ சம்பளம் வாங்குவேன். ஆனால், நீங்கள் பத்து எபிசோடுகள் கொண்ட வெப் சீரிஸ் என்கிறீர்கள். ஒரு எபிசோடு அரை மணி நேரம். ஆக, 5 மணி நேரம் ஆகுது. அதுக்கு ஏத்த மாதிரி நீங்களே கூட்டி கழிச்சு சம்பளத்தை கொடுங்க. க க க போ என்று கேட்டுள்ளார்.

இதனை கேட்ட அந்த OTT நிறுவனத்தின் தயாரிப்பாளர் புயல் காற்றில் பரந்த பொறி போல தெறித்து ஓடியுள்ளார்.

"இரண்டரை மணி நேரத்துக்கு இவ்ளோ வாங்குவேன்..அப்போ 5 மணி நேரத்துக்கு.." - தெறித்து ஓடிய தயாரிப்பாளர்..! "இரண்டரை மணி நேரத்துக்கு இவ்ளோ வாங்குவேன்..அப்போ 5 மணி நேரத்துக்கு.." - தெறித்து ஓடிய தயாரிப்பாளர்..! Reviewed by Tamizhakam on July 22, 2020 Rating: 5
Powered by Blogger.