இணையத்தில் திடீரெனே தீயாய் பரவும் படு சூடான லிப்-லாக் காட்சி - இளம் நடிகை ஹனி ரோஸ் வருத்தம்..!


தமிழில் ஜீவா நடித்த சிங்கம்புலி உட்பட ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். இனி தமிழ்பக்கம் தலைகாட்டமாட்டேன் என்ற முடிவோடு இருப்பதுபோல் மலையாள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளியான "ஒன் பை டூ" என்ற திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இவர் நடித்திருந்த ஒரு லிப்-லாக் காட்சி கிட்ட தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து இப்போது திடீரென வைரலாகி வருகின்றது.

இயக்குனர், அருண்குமார் அரவிந்த் இயக்கிய இந்தப் படத்தில், பகத் பாசில், முரளி கோபி, அபிநயா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், அழகம் பெருமாள் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு கதை எழுதியது தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் இப்போது வரை பேசப்படுவதற்கு, அதில் நடிகை ஹனிரோஸ் நடிகர் முரளி கோபிக்கு அழுத்தமாகக் கொடுத்த லிப் லாக் முத்தமும் ஒரு காரணம்.

இந்த முத்தக்காட்சி இப்போதுவரை சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி சமீபத்தில் நடிகை ஹனிரோஸ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இப்படியொரு லிப் லாக் காட்சி பற்றி படத்தின் இயக்குனர் சொல்லவில்லை.

கதைப்படி என் கேரக்டரை விரும்பிய ஒருவர், இறந்து விடுகிறார். பிறகு திடீரென்று என் முன் தோன்றினால், என்ன நடக்கும் என்பதுதான் காட்சி. நான் நீண்ட நேரம் யோசித்து பார்த்து விட்டு அந்த காட்சிக்கு அது தேவையான ஒன்று தான் என்று முடிவெடுத்து நடிக்க ஒப்புக்கொண்டேன்.

ஆனால், அந்த காட்சி விளம்பரத்துக்காக பயன்படுத்தப்பட்டது. அது படுக்கையறை காட்சி கூட கிடையாது. வெறும் லிப்-லாக் மட்டும் தான். நான் ஒன்று நினைத்து செய்தால், அது ஒன்று நடக்கின்றது. இனிமேல் படங்களில் லிப்லாக் காட்சி என்றால் ஒன்றுக்கு நூறுமுறை யோசித்து விட்டு தான் செய்வேன் என்று கூறியுள்ளார் ஹனி ரோஸ்.

என்ன இருந்தாலும் நான் நடித்த அந்த லிப்-லாக் காட்சியை படத்தின் விளம்பரத்திற்காக பயன்படுத்தியது எனக்கு வருத்தம் தான் என்று வேதனை தெரிவித்துள்ளார் ஹனி.

இணையத்தில் திடீரெனே தீயாய் பரவும் படு சூடான லிப்-லாக் காட்சி - இளம் நடிகை ஹனி ரோஸ் வருத்தம்..! இணையத்தில் திடீரெனே தீயாய் பரவும் படு சூடான லிப்-லாக் காட்சி - இளம் நடிகை ஹனி ரோஸ் வருத்தம்..! Reviewed by Tamizhakam on July 31, 2020 Rating: 5
Powered by Blogger.