"உங்க பொண்டாட்டிய நீங்களே கலாய்ச்சிட்டா நாங்க எதுக்கு..?" - கயல் சந்திரனை கேட்கும் ரசிகர்கள்...!


சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார். அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.இவர் தொலைக்காட்சிகளில் வீடியோ ஜாக்கியாக தான் அறிமுகமானர்.

இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக உள்ளவர் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன். இவர் சன் மியூசிக் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

சமூக வலைதலங்களிலும் பிரபலமாக உள்ள இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவருக்கு போட்டியாக அவரது கணவரும் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் அஞ்சனாவின் கணவரும், நடிகருமான கயல் சந்திரன் அஞ்சனா, சாஞ்சனா, படுத்தனா, உக்காந்தனா என்று அவரது மனைவி அஞ்சனாவின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.



இதனை பார்த்த அஞ்சனா, மவனே.. நான் தான் உன்னுடைய சாப்பாட்டை சமைக்கிறேன். நியாபம் வச்சிக்கோ என்று கூறியுள்ளார், ரசிகர்கள் வயிறுமுட்ட சிரித்து வருவதுடன், "உங்க கொண்டாடிய நீங்களே கலாய்ச்சிட்டா நாங்க எதுக்கு..?" என்று மீம்களை சேர் செய்து வருகிறார்கள்.