கருப்பு நிற டீ-சர்ட், பிங்க் நிற ட்ராக் பேண்ட் - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் ரோஜா - வைரலாகும் வீடியோ..! வாயை பிளந்த ரசிகர்கள்..!


செம்பருத்தி படம் வெளியானதும் அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபுதேவா, சரத்குமார் இப்படி பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார் நடிகை ரோஜா.

அடுத்து தெலுங்கு திரையுலகம் இவருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. அப்படியே ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். பிறகு செல்வமணியை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்ந்தார்.

இவர்களது காதல் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட பெரும் கதையாகும். இந்நிலையில் அங்கேயே ச.ம.உ ஆனார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவர் புகைப்படங்கள் அப்லோட் செய்வார்.

தற்போது அவரின் மகள் அன்ஷுமாலிகாவின் புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார். இவரது அழகை மிரண்டு போகிறார்கள். அன்ஷு தற்போது படித்து பள்ளியில் படித்து வருகிறார். மேலும், அவர் சினிமாவுக்கு வருவதற்கான எண்ணம் தற்போது இல்லை என்று கூறுகிறார்.

ஆந்திர அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கும் நடிகை ரோஜா சமீபத்தில் ஆம்புலன்சை ஓட்டி சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் நான் ஆம்புலன்சை இயக்கினேன் என்றும் வேறு எதுவும் காரணமில்லை என்று ரோஜா கூறியதால் அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், திரைப்பட துறையை சேர்ந்த ரோஜா தற்போது அரசியல் பிரபலமாக இருக்கிறார். ஆனால், சினிமா சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதோ, சினிமா தொழிலாளர்களுக்கு உதவி செய்வதோ கிடையாது. இது தான் தன்னை வளர்த்துவிட்ட சினிமா துறைக்கு ரோஜா காட்டும் நன்றியா..? என்று இயக்குனர் ஒருவர் கடுமையாக சாடியிருந்தார்.

இப்படி பரபரப்புக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமில்லாமல் லைம் லைட்டில் இருக்கும் ரோஜா தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதிலும் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.

வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்து வருகிறார் அம்மணி. இளம் நடிகைகள் உடற்பயிச்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈற்கிறார்கள். அவர்களுக்கு போட்டியாக ரோஜாவும் உடற்பயிச்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.


கருப்பு நிற டீ-சர்ட் மற்றும் பிங்க் நிற ட்ராக் பேண்ட் சகிதமாக டம்பெல்களை வைத்து உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் 47 வயதிலும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.