"கேமராவிற்கு பின்னால் இருப்பவர்களை இப்படித்தான் கடுப்பேத்தனும்.." - ஸ்ரீதிவ்யா வெளியிட்ட புகைப்படங்களை பாருங்க..!


தெலுங்கில், 'ஹனுமான் ஜங்க்ஷன் ' என்கிற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இதை தொடர்ந்து ஒரு சில தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

இதை தொடர்ந்து தெலுங்கில், 'மனசார' என்கிற படத்தின் மூலம் கடந்த 2010 ஆம் ஆண்டு நாயகியாக மாறினார். இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

தெலுங்கு மொழியை தொடர்ந்து தமிழ் படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்தது. அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு, இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நடித்தார்.

இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதை தொடர்ந்து, அடுத்தடுத்து தமிழ் படங்களில் கமிட் ஆகி நடிக்க துவங்கினார்.ஆரம்பம் இவருக்கு அமோகமாக இருந்த போதிலும், இவர் கடந்த சில ஆண்டுகளாக நடித்த தமிழ் படங்கள் படு தோல்வியை தழுவியது.

இதனால் இவருக்கு வந்த பட வாய்ப்புகளும் குறைய துவங்கியது. கடைசியாக இவர் நடிகர் ஜீவாவுடன் நடித்த 'சங்கிலி புங்கிலி கதவை தொர ' படம் தான் வெளியாகியது.

அவ்வளவு தான் ஆள் எங்கே போனார்..? என்ன ஆனார்.? என்றே தெரியவில்லை. பிரபல அரசியல் வாரிசு நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்ததால் இவருக்கு பட வாய்ப்புகளை தரக்கூடாது என இயக்குனர்கள், தயாரிப்பளர்களுக்கு "அவர்கள்" ஆர்டர் போட்டுள்ளார்கள் என்ற பேச்சும் உள்ளது.

சினிமா, செய்தி ஊடகம் என எதிலுமே அவர்களை எதிர்த்தால் சோத்துக்கு வழி இல்லாமல் தான் நிற்க வேண்டும் என்ற நிலையில் இந்த நடிகைகள் எல்லாம் எம்மாத்திரம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.


இருந்தாலும், சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது தன்னுடைய இருப்பை உறுதிபடுத்துகிறார் ஸ்ரீதிவ்யா.  அந்த வகையில், தற்போது சில குறும்புத்தனமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


மேலும், " கேமராவுக்கு பின்னால் இருப்பவர்களை கடுப்பேற்ற வேண்டும் என்றால் ஒழுங்காக போஸ் கொடுக்காமல் நிற்பது தான் ஒரே வழி" என்று சேட்டையான கேப்ஷனையும் வைத்துள்ளார்.

"கேமராவிற்கு பின்னால் இருப்பவர்களை இப்படித்தான் கடுப்பேத்தனும்.." - ஸ்ரீதிவ்யா வெளியிட்ட புகைப்படங்களை பாருங்க..! "கேமராவிற்கு பின்னால் இருப்பவர்களை இப்படித்தான் கடுப்பேத்தனும்.." - ஸ்ரீதிவ்யா வெளியிட்ட புகைப்படங்களை பாருங்க..! Reviewed by Tamizhakam on July 11, 2020 Rating: 5
Powered by Blogger.